
கிரிவலத்திற்கு பெயர் போனது திருவண்ணாமலை . திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மற்றும் மற்ற மாநில பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது வழக்கம் .
அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் மேற்கொள்வது பல ஆண்டு காலமாக வழக்கத்திலிருந்து வருகிறது . இந்நலையில் இன்று பவுர்ணமி என்பதால் , கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது . அதன்படி , இன்று இரவு 8.58 மணிக்கு துவங்கி நாளை இரவு 8.52 மணி வரை உகந்ததாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று கிரிவலம் என்பதால் , லட்ச கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்பட்டு , தேவையான அனைத்து வசதியையும் தயார் நிலையில் வைத்துள்ளது கோவில் நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.