தேனி மாவட்டம் வருஷ நாடு அருகில் உள்ள பூசணியூத்து எனும் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஈஸ்வரன் தனக்கு ஒரு நாள் பள்ளி விடுமுறை வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஆசிரியருக்கு கடிதம் எழுதி , தன்னுடன் பயிலும் சக மாணவர் ஒருவனிடம் கடிதத்தை கொடுத்து அனுப்பி உள்ளார் .
ஈஸ்வரனின் விடுப்புகான காரணம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது . அதாவது பொதுவாகவே லீவ் எடுக்க வேண்டுமேன்றால், ஏதாவது ஒரு பொய் சொல்வதே வழக்கம் . ஆனால் ஈஸ்வரனோ “ என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் , கால்நடைகளை கவனித்துக்கொள்ள இன்று ஒரு நாள் விடுப்பு வேண்டுமென , அந்த மாணவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்வரனின் லீவ் லெட்டர் தற்போது வைரலாக பரவி வருகிறது. உண்மையை சொல்லி விடுப்பு கேட்ட ஈஸ்வரனை பாராட்டி , மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது