இன்று வைகுண்ட ஏகாதசி: திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு ....

By Selvanayagam PFirst Published Jan 6, 2020, 8:22 AM IST
Highlights

திருப்பதி திருமலை கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்றும், நாளையும் மட்டுமே சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி திருமலை கோயிலுக்கு உலக முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தினமும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை ஏழுமலையானை மனமுருக வேண்டி செல்கின்றனர். 

விழாக்காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் விசேஷமானது. அன்றைய தினம் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். 

கோயில்களை பொறுத்து சொர்க்க வாசல் திறப்பு நாட்கள் எண்ணிக்கை கூடும், குறையும்.இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்ட இன்றும் நாளையும் மட்டுமே வைகுண்ட துவாரம் நிகழ்வு நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காலவர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பாரெட்டி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்த ஆண்டு வைகுண்ட துவாரம் நிகழ்வு 6 (இன்று), 7 (நாளை) ஆகிய 2 தினங்களில் மட்டுமே நடைபெறும்.

மேலும், திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இனி ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும். அதற்கு மேல் வேண்டுமானால் ஒரு லட்டு ரூ.50 என்ற விலையில் வாங்கி கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!