9 மணி நேரம் தூங்கும் தூங்கு மூஞ்சியா நீங்கள்..? அதிர வைக்கும் ஆதாரம்..!

By ezhil mozhiFirst Published Jan 4, 2020, 7:34 PM IST
Highlights

சீனாவை சேர்ந்த பல்கலைகழகம் இது குறித்து நடத்திய ஆய்வில் 31 ஆயிரத்து 750 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு முழுக்க முழுக்க 62 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை வைத்து சோதனை செய்யப்பட்டது.

9 மணி நேரம் தூங்கும் தூங்கு மூஞ்சியா..? அதிர வைக்கும் ஆதாரம்..! 

அதிக நேரம் உறங்கினால் அவர்களுக்கு ஆயுட்காலம் குறையும் என சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை தெரிவித்து உள்ளது. இது தவிர பகல் நேரத்தில் அதிக நேரம் தூங்கினாலும் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட 85 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

சீனாவை சேர்ந்த பல்கலைகழகம் இது குறித்து நடத்திய ஆய்வில் 31 ஆயிரத்து 750 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு முழுக்க முழுக்க 62 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை வைத்து சோதனை செய்யப்பட்டது. இவர்கள் கடந்த 6 வருட காலத்தில் குறைந்தது ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக உறக்கம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் சிறுவயதிலிருந்து நல்ல ஆரோக்கியமாக எந்த விதத்திலும் உடல்நலக்குறைவு இல்லாமல் வளர்ந்து வந்துள்ளனர். நடுத்தர வயதிலும் சுறுசுறுப்புடன் வேலை செய்வதும் சரியான நேரத்தில் தூங்கி சரியாக எழுந்து அவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் 60 வயதை தொட்ட பிறகு ஓய்வு எடுக்கும் ஒரு காலநிலையில் அதிக உறக்கம் கொள்பவர்களாக இருக்கின்றனர்.

அந்தவகையில் தற்போது 9 மணி நேரத்திற்கு மேலாக தூங்கும் பழக்கம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதவிர பகல் நேரத்திலும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக உறக்கம் கொண்டு இருப்பதால், அவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தவிர்த்து சரியாக தூக்கம் இல்லாவிட்டாலும் பக்கவாதம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் தூக்கம் என்பது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி முதல் 8 மணி நேரம் நல்ல ஆழ்ந்த உறக்கம் இருந்தால் மட்டுமே நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்பது நிரூபணமாகிறது.

இது தவிர்த்து இரவு நேரங்களில் மிகவும் தாமதமாக உறங்குவது, அதேபோன்று காலை நேரத்தில் மிகத் தாமதமாக எழுந்து இருப்பதும் பகல் நேரத்தில் உறக்கம் கொள்ளும் பழக்கம் உடையவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் எழுந்து ஆரோக்கியமாக வாழ்வது நல்லது. 

click me!