
யூனிபார்மில்..மக்கள் காலை தொட்டு தொட்டு கும்பிடும் டி.எஸ்.பி ..! வெளிவந்த பகீர் வீடியோ...!
ஆந்திராவில் அமராவதியை தலைநகராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நடத்திய போராட்டத்தில் பெண்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
அப்போது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு ஒத்துழைக்க கூடாது என கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் விவசாயிகள். மேலும் பாதுகாப்பு பணியில் உள்ள பொலிஸாருக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்க கூடாது என கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் நிலைமைசற்று மோசமானதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டங்களை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறி காவல்துறை அதிகாரி டி.எஸ்.பி தான் சீருடை அணிந்து இருப்பதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் கால்களை தொட்டு வணங்கி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த தருணத்தில் மக்களும் நிலைமையை சமாளிக்க ஏன் சார் இப்படிபண்றீங்க என விலகி விலகி செல்லும் வீடியோ காட்சி வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.