வந்துவிட்டது "ஒன் ஸ்டாப் சென்டர்"...! பெண்களுக்கு தேவையான அடுத்த நல்ல திட்டம்..!

By ezhil mozhiFirst Published Jan 4, 2020, 1:23 PM IST
Highlights

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் பொருட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் ஒன்ஸ்டாப் சென்டரை உருவாக்கியது. 

வந்துவிட்டது "ஒன் ஸ்டாப் சென்டர்"...! பெண்களுக்கு தேவையான அடுத்த நல்ல திட்டம்..! 

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஐந்து மாவட்டங்களில் "ஒன் ஸ்டாப் சென்டரை" ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சமூகநலத் துறை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் பொருட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் ஒன்ஸ்டாப் சென்டரை உருவாக்கியது. தற்போது தமிழகத்தில் மதுரை, சேலம், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் ஒன் ஸ்டாப் சென்டர் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகள் மூலமாக பாதிக்கப்படும் பெண்களுக்கு தங்க வசதி ஏற்படுத்திக்கொடுப்பது, உணவு, குடிநீர், படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுப்பது என பல நன்மைகளை செய்து வருகிறது.

இது தவிர அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப வல்லுனர், சமையலர், வழக்கறிஞர் என ஆலோசனை வழங்க தேவையானவர்களை நியமனம் செய்யப்பட்டு உள்ளது. 

இதற்கிடையில் தமிழகத்தில் நெல்லை, காஞ்சிபுரம், வேலூர்,விழுப்புரம், மாவட்டங்களை பிரிந்து தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாகி இருப்பதால் புதிய மாவட்டங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!