மழைக்காலத்தில் வீட்டில் நசநசவென  ஈரப்பதமாக இருந்தால் 'இந்த' விஷயங்களை பண்ணுங்க..

By Kalai SelviFirst Published Jul 6, 2024, 1:55 PM IST
Highlights

Monsoon Home Tips : மழை காலத்தில் பல வகையான தொற்றுக்களின் ஆபத்து அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு சிறிய கவனக்குறைவு கூட கடுமையான சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த சீசனில் வீட்டை ஈரப்பதமாக வைப்பது தவிர்க்கவும்.

மழைக்காலம் நம் உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தாலும் அது பல பிரச்சனைகளையும் கொண்டு வரும். குறிப்பாக இந்த சீசனில் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி, வீட்டில் சுவர்கள் ஈரப்பதமாக இருப்பதால், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் அதில் வளரும். இதனால் உடல் நலம் தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படும். உங்களுக்கு தெரியுமா.. ஒரு நபர் தொடர்ந்து ஈரப்பதமாக இருக்கும் வீட்டில் இருந்தால், அந்த நபருக்கு சுவாசம் தொடர்பான நோய் தொற்றுகள் தவிர, பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

மழைக்காலத்தில் வீட்டை ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க சில வழிகள் இங்கே..

  • நீங்கள் மழைக்காலத்தில் துணியை துவைத்தால் அது நன்கு காய்ந்த பிறகே பீரோலில் வைக்க வேண்டும். மேலும், இந்த சீசனில் சூரிய ஒளி அவ்வளவாக இருக்காது. இதனால் ஆடைகள் ஈரமாகவே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஹேர் டிரையரை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • அதுமட்டுமின்றி, படுக்கையறையின் ஃபேனின் கீழ் துணிகளை காய வைப்பதை முற்றிலும் தவிர்க்கவும். ஏனெனில், ஈரமான ஆடையில் இருந்து வரும் வாசனை படுக்கை அறை முழுவதும் பரவி, பல நாட்கள் அங்கேயே நீடித்திருக்கும்.
  • மழைக்காலத்தில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் மூடியிருந்தால் வீட்டில் ஈரப்பதம் தங்கும். அதுமட்டுமின்றி, வீட்டில் துர்நாற்றமும் அடிக்கும். எனவே, அறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வையுங்கள். இதனால் வீட்டில் ஈரப்பதம் நீங்கும் துர்நாற்றமும் குறையும். 
  • அதுபோல உங்களது வீட்டில் ஏசி இருந்தால் வீட்டில் அடிக்கும் துர்நாற்றத்தையும், ஈரப்பதத்தையும் சுலபமாக அகற்றலாம். எப்படியெனில், ஏர் கண்டிஷனர் வெப்ப காற்றை அகற்றி குளிர்ந்த காற்றைக் கொண்டு வருவதன் மூலம் இயற்கையாகவே அறையில் ஈரப்பதத்தை குறைக்கும்.
  • கல் உப்பு ஒரு இயற்கை ஈரப்பதமூட்டியாக செயல்படுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் கல் உப்பு நிரப்பி அதை அறையின் வெவ்வேறு மூலைகளில் வைத்தால், உப்பு ஈரப்பதத்தை உறிஞ்சுவது மட்டுமின்றி, துர்நாற்றம் பிரச்சனையும் குறிக்கும்.
  • மழைக்காலத்தில் வீட்டில் ஈரப்பதத்தால் துர்நாற்றம் வீசினால் நீங்கள் கற்பூரத்தை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு காட்டன் துணியில் கற்பூரத்தை கட்டி அதை அறையின் வெவ்வேறு மூலைகளில் வைக்க வேண்டும். இது தவிர அறையில் கற்பூரத்தை எறிய வைக்கலாம். கற்பூரத்தின் வாசனை ஈரப்பதத்தால், ஏற்பட்ட துர்நாற்றத்தை குறைக்கும்.
  • மழைக்காலத்தில் மர சாமான்களில் பூஞ்சை வரும். எனவே, அவற்றை உடனடியாக சரி செய்ய பூச்சிக்கொல்லியை பயன்படுத்துங்கள்.
  • மழைக்காலத்தில் நீங்கள் பயன்படுத்தும் பாய், போர்வை ஆகியவற்றை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கண்டிப்பாக சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இதனால் பூஞ்சைகள் அதில் தங்காது.

Latest Videos

click me!