
எத்தனை கோடி பணம் வைத்து இருந்தாலும் நம் உடல் ஆரோக்கியம் கெட்டு விடுமளவிற்கு நம் வாழ்க்கை பயணம் இருந்தால் யாராலும் எதையும் செய்ய முடியாது என்றே கூறலாம்.
நல்ல மனம், நல்ல செயல், நல்ல பழக்க வழக்கங்கள் இவை இருந்தாலே போதும்...நம் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். இதற்கு மாறாக தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானால் கண்டிப்பா உடல் ஆரோக்கியம் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, குடி பழக்கம், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள்,பாஸ்ட் புட் உணவை எடுத்துக்கொள்வது என ஒரு பக்கம் உடல் நலனை பாதிக்கும் செயலை செய்வார்கள். இன்னொரு பக்கம், சாதாரணமாக நாம் பேருந்தில் பயணம் செய்யும் போதும் அல்லது பொது இடங்களில் விற்கப்படும் சில சுகாதாரமற்ற தின்பண்டங்களை எடுத்துக்கொள்வதாலும் சில பிரச்சினையை நம் உடலில் உண்டாக்கும்.
உதாரணம்:
இந்த புகைப்படத்தை பாருங்கள் ஒரு பக்கம் சிறுநீர் கழித்தல், மற்றொரு பக்கம் திறந்த வெளியில், மூடி பாதுகாக்காமல் உள்ள தின்பண்டங்களையம், பழங்களையும் வைத்து பேருந்தில் விற்பனை செய்வது. கழிப்பிடம் அருகாமையிலேயே உணவு பண்டங்களை வைத்தும், மக்களும் வேறு வழியின்றி அந்த நேரத்தில் கண் எதிரே உள்ளது என அதனை வாங்கி உண்பார்கள்.
அவ்வாறு வாங்கும் போது அது தூய்மையானதாக உள்ளதா என தெரிந்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் தவிர்ப்பது நல்லது மற்ற விஷயங்கள் மேலே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.