"ஆண்மையை" அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதும்..!

Published : Aug 31, 2018, 07:11 PM ISTUpdated : Sep 09, 2018, 08:09 PM IST
"ஆண்மையை" அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதும்..!

சுருக்கம்

ஆண்மை குறைவை சரி செய்ய, மிகவும் உறுதுணையாக இருக்கும்  சில  ஜூஸ் என்ன என்பதை பார்க்கலாம். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், நல்ல முன்னேற்றம் உள்ளது என பெரும்பாலான ஆண்கள் தெரிவித்து உள்ளனர் 

ஆண்மை குறைவை சரி செய்ய, மிகவும் உறுதுணையாக இருக்கும்  சில  ஜூஸ் என்ன என்பதை பார்க்கலாம்.இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், நல்ல முன்னேற்றம் உள்ளது என  பெரும்பாலான ஆண்கள் தெரிவித்து உள்ளனர் 

பீட்ரூட் ஜூஸ் 

பீட் ரூட்  ஜூஸ் எடுத்துக்கொள்வதால்,  நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய  செய்து, தேவையான  ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது 

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும்.. இந்த தருணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்டால்,  ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்மை பிரச்சனை வராமல் இருக்கும் 

பீட் ஜூஸ் தயார் செய்வது எப்படி ..?

பீட்ரூட்டை மிச்சியில் போட்டு அரைத்து அதனை அப்படியே சாப்பிட  பிடிக்காது. இதன்  உடன் ஆப்பிள், ஆர்ஞ்சு,இஞ்சி  இதில் ஏதாவது ஒன்றை அதனுடன் சேர்ந்து  ஜூஸாக எடுத்துக் கொண்டால் மிக   சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் இதனுடன்,  வெஜிடேபல்ஸ், கேரட் , முள்ளங்கி இதி எதாவது ஒன்றுடன் சேர்ந்து  சாப்பிடலாம்.

பீட் ஜூஸ் மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், இரும்பு போன்ற  சத்துக்களை கொண்டு உள்ளது. பொதுவாகவே பீட் ரூட் கேன்சருக்கு எதிராக போராடக் கூடிய அற்புதமான ஜூஸ். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த  ஜூசை தினமும் எடுத்துக் கொள்ளும் போது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் , சுகர்  அளவை அடிக்கடி செக் செய்துக் கொள்வது நல்லது.

மேலும்  யோகா செய்வதன் மூலம், உடல் நலம் ஆரோக்கியம் பெற்று, ரத்த சுழற்சி  சீராக  இருக்கும்...மேலும் இதன் மூலம்  தாம்பத்ய உறவில் எந்த விரிசலும் இல்லாமல் வாழ வழி வகை செய்ய முடியும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்