உர்ர்ர் என இருந்தால் ஆடுகளுக்கு கூட பிடிக்காதாம்; சிரித்த முகத்துடன் இருந்தால் தான் கிட்டேயே வருமாம்;

By manimegalai aFirst Published Aug 30, 2018, 6:49 PM IST
Highlights

பொதுவாகவே எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எளிதில் பிடித்துவிடும். சிடுசிடுவென இருப்பவர்களிடம் பேச யாரென்றாலும் கொஞ்சம் தயங்க தான் செய்வார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் கூட பொருந்துமாம். அதிலும் குறிப்பாக ஆடுகளுக்கு. சமீபத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஒரு ஆய்வின் முடிவு தான் இப்படி தெரிவித்திருக்கிறது.

ஆடுகள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நபர்களை தான் அதிகம் விரும்புகின்றனவாம். ஆடுகளுக்கு எப்படி தெரியும் மனிதர்கள் சிரிக்கின்றனரா? இல்லை கோபமாக இருக்கின்றனரா? என்று என நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆனால் இந்த கேள்விக்கு விடையளிக்கிறது ராயல் சொசைட்டி எனும் நிருவனம் நடத்தி இருக்கும் இந்த ஆராய்சி.

முதலில் இந்த ஆராய்சிக்காக ஒரு ஆட்டு மந்தையில் இருந்து 35 ஆடுகளை தெரிவு செய்திருக்கின்றனர் ஆராய்சியாளர்கள். அதன் பிறகு அந்த ஆடுகளை எல்லாம் ஒரு அறைக்குள் அனுப்பி இருக்கின்றனர். அந்த அறையில் மனிதர்களின் கோபமான மற்றும் சந்தோஷமான முக பாவங்கள் கொண்ட புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களின் அருகில் தான் அனைத்து ஆடுகளும் சென்று நின்றிருக்கின்றன. இதே ஆராய்ச்சியை இன்னொரு விதமாகவும் முயற்சித்து பார்த்திருக்கின்றனர். அதில் ஒரே நபரின் கோபமான மற்றும்ன் சந்தோஷமான முக பாவங்கள் அடங்கிய புகைப்படங்களை அந்த அறையில் வைத்திருக்கின்றனர் அப்போதும் அந்த ஆடுகள் , சிரித்த முகம் உள்ள நபரையே தேர்வு செய்திருக்கின்றன.

இதனால் ஆடுகள் கூட புன்னகையுடன் , மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் மனிதரையே தேர்வு செய்கின்றன என தெரியவந்திருக்கிறது. ஆடுகளே இவ்வளவு தூரம் யோசிக்கிறது என்றால் மனிதர்கள் எப்படி எல்லாம் யோசிப்பார்கள். மற்றவர்களுக்காக இல்லை என்றாலும் நமக்காகவாவது நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது, அவசியம் தானே.
 
click me!