விந்தணுக்கள் குறைவிற்கு சில முக்கிய காரணம் இதோ...!

 
Published : Jan 10, 2018, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
விந்தணுக்கள் குறைவிற்கு சில முக்கிய காரணம் இதோ...!

சுருக்கம்

this is the reason fordepletion of sperm count in nature

குழந்தையின்மை பிரச்சனை தற்போது பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது

அந்த காலக்கட்டத்தில் குழந்தையின்மை என்பது இல்லாத ஒன்றாக இருந்தது.ஆனால் இந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்யும் போதே தம்பதிகள் பயப்பட தொடங்குகின்றனர்.

குழந்தை பிறப்பு என்பது கடவுள் கொடுத்த வரமாக மாறி உள்ளது.இன்பெர்டிலிட்டி சென்டர் அதிகரித்து உள்ளது.

குழந்தையின்மைக்கு என்னதான்  காரணமாக இருக்கும் என சிகிச்சை பெற முதலில்  பெண்ணை தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்வர்.

ஆனால் பிரச்னைச பெண்ணுக்கு மட்டும் இருக்காது,..ஆணுக்கும் இருக்கும். அதாவது குழந்தையின்மைக்கு காரணம் ஆண்களாக இருக்கிறார்கள் என்றால்,எந்தெந்த  காரணம் என்று தெரிந்துக்கொள்ளலாமா...

மிக முக்கியமாக....விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என்னவென்று பார்க்கலாமா..?

செல்போன்களாலும் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது.ஆண்கள் தங்கள் பின்புறம் செல்போனை வைக்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள், கதிரியக்கங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கின்றது.

வெப்பம் அதிகமான இடங்களில் ஆண்கள் அதிக நேரம் இருந்தால் விந்தணு குறைபாடு ஏற்படும். 4 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் இருக்கும் போது சரியான அளவில் விந்தணு உற்பத்தியாகும்.

அதிகமான உடல் பருமன் உள்ளவர்களுக்கும் விந்தணு குறைபாடு ஏற்படும். உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

 புகைப்பிடித்தல் பழக்கம் இருக்கும்போது அது இரத்த ஓட்டத்தை குறைத்து விந்தணுக்கள் எண்ணிக்கையையும் குறைக்கும்.

அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் விந்தணுக்கள் குறைபாடு ஏற்படும்.

அதிக அளவில் மன அழுத்தத்தில் உள்ள ஆண்களுக்கு ஆண்மை பாதிக்கும். எனவே மன அழுத்தம் பிரச்சனையிருந்தால் அதனை சரிசெய்து வாழ வேண்டும்.

சொல்லப்போனால், உடல் எப்போதும் வெப்பநிலை அதிகமாக உள்ள ஒரு சூழலில் வேலை செய்யும் போது விந்தணுக்களில் தன்மை மாறுகிறது என்றே கூறப்படுகிறது.

இதே போன்று பெண்களும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.குறிப்பாக ஐடி யில் வேலை செய்யும் பெண்கள் பலருக்கு குழந்தியினமாய் பிரச்சனையை சந்தித்து   வருகிறார்கள் என ஆய்வில் ஏற்கனவே தெரியவந்துள்ளது .

காரணம்,சிஸ்டம் முன்பாக அமர்ந்து பல மணி நேரம் வேலை செய்வது, இதன் காரணமாக உடலில் வெப்பநிலை அதிகரிக்கும், ஹார்மின் மாற்றங்கள் நிகழும், இது போன்ற பல காரணங்கள் கூறப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்