பெண்மையின் அடையாளமாக நதிகள் கருதப்படும் இந்தியாவில், ஒரே ஆண் நதியும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில் உள்ள நதிகளின் வரலாறு மிகவும் பழமையானது. பல நூற்றாண்டுகளாகத் தூய்மையைப் பேணும் நதிகள், அந்தந்த திசையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் உள்ள நதிகள் பெண்களுடன் ஒப்பிடப்படுகின்றனர். அந்த வகையில் கங்கை, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி, நர்மதா, சிந்து, துங்கபத்ரா போன்ற நதிகளுக்கு பெண்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்திய நதிகள் பெண்களுடன் ஒப்பிடப்படுவதற்கு இதுவே காரணம். இந்தியாவில் நதி என்பது தாயாக போற்றப்படுகிறது. புனித நதியில் குளித்தால் எல்லா பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
பெண்மையின் அடையாளமாக நதிகள் கருதப்படும் இந்தியாவில், ஒரே ஆண் நதியும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம். பிரம்மபுத்திரா நதி தான் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு ஆண் நதியாகும். பிரம்மப்புத்திரா என்றால் பிரம்மாவின் குழந்தை என்று அர்த்தம். வேதங்கள் மற்றும் புராணங்களின்படி, பிரம்மபுத்திரா நதி பிரம்மபித்தா என்று அழைக்கப்படுகிறது. பிரம்மா ஒரு சிறந்த ஞானியாகக் கருதப்படுகிறார். சாந்தனுவின் மனைவி அமோக மகரிஷி பிரம்ம மந்திரத்தின் அழகில் மயங்கி அவர்கள் திருமணம் செய்துகொண்டதாக வரலாறு கூறுகிறது. பிரம்மா - அமோகாவுக்கு ஒரு மகன் பிறந்தான்.
எவ்வளவு டிரை பண்ணாலும் பணத்தை சேமிக்க முடியலயா? அப்ப இந்த டிப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணுங்க..
புராணங்களின்படி, பிரம்மாவிடமிருந்து பிறந்ததால் அவருக்கு பிரம்மபுத்திரா என்று பெயரிடப்பட்டது. அச்சிறுவன் தானே தண்ணீர் போல ஓடுகிறான் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் இந்த நதியின் நீளம் 2900 கி.மீ. இந்த நதியின் பிறப்பிடம் சீனாவில் உள்ள திபெத்தின் மானச சரோவர் ஆகும். திபெத்தில் இது யார்லுங் சாங்போ என்று அழைக்கப்படுகிறது. இது மானச சரோவர் மலைத்தொடரில் இருந்து உருவாகும் இரண்டாவது நதியாகும். சீனாவில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி அருணாச்சல பிரதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைகிறது.
இதன் பிறகு அசாம் வழியாக வங்கதேசத்திற்குள் நுழைகிறது. இங்கு பிரம்மபுத்திரா இரண்டு ஓடைகளாகப் பிரிகிறது. ஒகபயா தெற்கே பாய்ந்து ஜமுனா என்ற பெயரில் கீழ் கங்கையில் இணைகிறது. இது பத்மாவதி நதி என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திரா ஆறு மற்றொரு இடத்தில் மேகனா நதியுடன் சந்திக்கிறது. இந்த ஆறுகள் வங்காளதேசத்தில் உள்ள சந்த்பூரில் வங்காளத்தை சந்திக்கின்றன. இந்த நதி இந்தியாவில் தெய்வமாக வழிபடப்படுகிறது.
பிரம்மபுத்திரா நதி திபெத்தில் 'சம்போ' என்றும், அருணாச்சலத்தில் 'திஹ்' என்றும், அசாமில் 'பிரம்மபுத்ரா' என்றும் அழைக்கப்படுகிறது.புஷ்கரத்தில் உள்ள பிரம்மா கோயிலுக்குச் சென்ற பிறகு, இந்த நதியில் நீராட வேண்டும் என்பது நம்பிக்கை. பிரம்மபுத்திரா நதியில் குளித்தால் உடல் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்றும் இதனால் பிரம்ம தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
60 ஆண்டுகளாக தூங்காத 80 வயது முதியவர்.. மருத்துவர்களால் கூட காரணத்தை கண்டறிய முடியவில்லை!