
அய்யய்யோ..."இறந்து போனவங்க" கனவுல வந்தா இதுவா அர்த்தம்..!
நாம் உறங்கும் போது கனவு வருவது என்பது இயல்பு. அதுவும் ஒரு சிலருக்கு பயத்தை கொடுக்கும்.ஒரு சிலருக்கு இனிமையான கனவுகள் வரும்..ஒரு சிலருக்கு எங்கோ பயணிப்பது போல கனவு வரும்..
இது போன்று கனவு வருவதில் மிக முக்கியமாக இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பொருள் என பார்ப்போம்.
பொதுவாகவே எந்த கனவாக இருந்தாலும்..இறந்தவர்கள் கனவில் வரும் முன், அவர்களை பற்றி அதிக அளவில் நினைத்து பார்த்து பார்த்து இருப்பார்கள்.
இயற்கை மரணமடைந்தவர்கள் - கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
அதிலும் குறிப்பாக, பேரன் பேத்தி எடுத்து இயற்கையான முறையில் மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் ஆசி கிடைக்கிறது என்று பொருள்.
ஆனால் வாழ்க்கை முழுமை அடையாமல் நடுவிலேயே இறந்துவிட்ட நபர்கள் கனவில் வந்தால் - சில இடர்பாடுகள் ஏற்படும். குடும்பத்தில் வாக்கு வாதாம்,பிரிவு உள்ளிட்டவை வருமாம்
இதனை தவிர்க்க குல தெய்வ வழிப்பாட்டை மேற்கொண்டால் ஆக சிறந்ததாக அமையும்.மேலும் பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம் .
வயதானவர்கள் பெரியவர்கள் வாழ்க்கை முழுவதும் நன்றாக வாழ்ந்து வந்தவர்கள் கனவில் வந்தால் கவலை பட தேவை இல்லை.
எனவே இனி யாருக்கு எந்த கனவு வருகிறது என்பதை பொருத்து அதன் பொருள் என்ன என்பதை தெரிந்துக்கோங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.