பழசு கண்ணா இது பழசு....இருந்தாலும் பட்டய கிளப்பும் பாருங்க....

Asianet News Tamil  
Published : Nov 04, 2017, 07:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
பழசு கண்ணா இது பழசு....இருந்தாலும் பட்டய கிளப்பும் பாருங்க....

சுருக்கம்

this is old and but always gold

 

பழசு கண்ணா இது பழசு....

எதுவுமே சொல்லி புரிய வைப்பது விட ஒரு நிகழ்வின் மூலமாக  நமக்கு கிடைக்கும் அனுபவம் தான் நம் வாழ்கையில் அடுத்து எந்தகட்டதிற்கு நாம் செல்ல  வேண்டும் என்பதை புரிய வைக்கும் 

அதே போன்று தான் நாம் உடளவில் பாதிக்கப்பட்டாலும்  இயற்கையாக நமக்கு கிடைக்கும் மூலிகைகள் மூலமாகவே  அனைத்து விதமான நோய்களையும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி விடலாம்

அந்த வகையில், நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்  மூலிகைகள் எப்படியெல்லாம்  நமக்கு  பயன்படுகிறது என்பதை பார்க்கலாம்

அருகம்புல் பொடி

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பொடி

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கரா பொடி

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி

ஆண்மை குறைபாடு,

மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

ஜாதிக்காய் பொடி

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

வேப்பிலை பொடி

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி

வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

வாழைத்தண்டு பொடி

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி

 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

மேற்குறிப்பிட்ட இந்த அனைத்து  பொடிகளும் சாதாரண நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைகிறது.எந்த பொடியை எப்படி பயன்படுத்த வேண்டும்,எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு , தேவைபட்டால், பயன் பெறுங்கள்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!