
தமிழ் நாட்டை பொறுத்தவரை ஏதாவது ஒரு இன்சிடன்ட் நடந்தால் போதும்...உடனே வந்துவிடுவார்கள் மீம்ஸ் மன்னர்கள் ...
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அவரவர் சமூகவலைத்தளங்களில் பதிவிடும் கருத்தோ....ஐயோடா சொல்லி மாளாது
அதிலும் குறிப்பாக அதிக ரசனை கொண்ட தமிழக மக்களுக்கு ஏற்ப அழகிய வசனங்களுடன் இன்றைய இளைஞர்கள் பதிவிடும் கருத்திற்கு மவுசு கொஞ்சம் அதிகம் தான் ...
ஒருவருடைய திறமையை அறிந்துகொள்வதற்கு நம் கையில் இருக்கும் ஆயுதம் பேஸ்புக் என்று கூட சொல்லலாம்....
நல்ல செய்தியோ அல்லது தேவை இல்லாத ஒன்றோ....எதை பதிவிட்டாலும் பேஸ்புக் மூலமாக உலகறிய செய்து விடுகின்றனர்
அந்த வகையில் , வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழையில், அதிகம் தண்ணீர் தேங்கி அதனால்பாதிக்கப்படும் மாவட்டம் பல ...
குறிப்பாக சென்னை ...சொல்லவே வேண்டாம் ....உள்ளூர் முதல் உலகம் வரை தெரியும்... சென்னையில் மழை என்றால் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கும்.....மக்கள் எப்படி பாதிப்பார்கள் என்று.....
இந்நிலையில், இந்த மழைக்கு ஏற்ப திண்டுக்கலை சேர்ந்த குசும்பு கார ஒருத்தர் என்ன வசனம் எழுதி இருக்கிறார் என்று நீங்களே பாருங்களேன்......
"அன்பார்ந்த சென்னை மற்றும் கடலூர் மக்களே...உங்கள் வீட்டு பெண்கள் இது போன்ற மழை வெள்ளத்திலும்,சுனாமி நிலநடுக்கத்திலும் கஷ்டப்படாமல் இருக்க,திண்டுக்கல் மாப்பிள்ளைக்கு பெண் தாருங்கள்.எங்கள் மாவட்டத்தில் தான் எதுவுமே வராது ..அதனால் பயம் இல்லாமல் பெண் தாருங்கள்...உடனே முந்துங்கள்,சிறப்பு சலுகை சில நாட்களுக்கு மட்டுமே....
இதுதான் அந்த வசனம் ..அதாவது சூழ்நிலைக்கு ஏற்ப, எப்படியெல்லாம் வசனம் எழுதி பெண் கேட்கிறார்கள் பாருங்கள்......
இந்த வசனம் தான் தாற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.