நீங்க லவ் பண்ற பெண்ணைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க...

 
Published : Nov 04, 2017, 02:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
நீங்க லவ் பண்ற பெண்ணைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க...

சுருக்கம்

Learn about your girl friend

எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள். 

*ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் "நெய்ல் பாலிஷ்"-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.  

*காதலுக்கு உண்மையான சாவி எதுன்னா? அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான்.அதனால் வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க... உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வையுங்க. 

*அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது "டேட்டிங்" போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.ஏன்னா சில பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க உங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க. அதனால எந்த நேரத்திலும் அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்து உங்க காதலியை முழுமையாக தெரிஞ்சு வையுங்க. 

*இன்னொரு விஷயம்... தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல என்றால்,அவங்க ரொம்பவே "டல்" ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. பொறுமையா காதில வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்சு கொண்டு அதை செயல்படுத்துறதுக்கு ஆரம்பியுங்க.  

சில பெண்களை புரிஞ்சுக்கவே முடியாதுங்க.....  அப்படியானவங்களை காதலிக்கிறவங்களுக்கு எதுகுமே சொல்ல முடியாது. இப்படியான பெண்கள் தாங்கள் என்ன கதைக்கிறம் என்று தெரியாமலே கதைப்பாங்க. தங்களுக்கு என்ன தேவை என்று கூட அவங்களுக்கு தெரியாம இருக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்