தொடங்கும் போது காதலி... தொடரும் போது மனைவி... நீடித்தால் மருமகள்...

Asianet News Tamil  
Published : Nov 03, 2017, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
தொடங்கும் போது காதலி... தொடரும் போது மனைவி... நீடித்தால் மருமகள்...

சுருக்கம்

poem indicates people life in chennai rain

மழைக் காலம் வந்துவிட்டாலே பலருக்கும் கவிதைகள் தானாய் ஊற்றெடுக்கும். அது இந்த மழைக்காலத்துக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? இதோ நெட்டிசன்கள் தொட்டுத் தொடர்ந்த கவிதைகள் இவை...

சாதாரணமாகவே மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கவிதைகள் அமைவதுண்டு. இங்கே நம் நெட்டிசன்கள் இப்படி கவிதைகளாகக் கொட்டி வருகின்றனர். மழை பெய்து வெள்ளம் பெருகி சிரமத்தைக் கூட்டினாலும், அதையும் ரசித்து கவிதையாய் வரைந்து தள்ளும் மனசு நம் மக்களுக்கு...

இரு வேறு யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் இரு கவிதைகள்... இதோ...

தொடங்கும் போது
காதலியைப் போல்
மகிழ்ச்சியாய் தெரிந்த மழை ...

தொடர்ந்து கொண்டே இருப்பதால் 
மனைவியைப் போல்
தொல்லையாய்த் தெரிகிறது...

இன்னும் நீடித்தால்
மருமகளைப் போல் வீட்டுக்குள் புகுந்து
நம்மை வெளியேற்றி விடுமோ
என்றே தோன்றுகிறது...

***

மழை பெய்து 
வீட்டுக்குள் வெள்ளம் வந்து 
பொருளை நாசம் செய்து விட்டதே என 
அதனைத் திட்டாதீர்கள்... 
திருடப் பட்ட 
தன் ஒரே புகலிடமான 
ஏரிகளையும், குளங்களையும் 
பரிதாபமாகத் தேடி அலைகிறது 
மழை நீர்.

தான் தஞ்சம் பெறும் புகலிடத்தை ஆக்கிரமித்து 
தன் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டதால் 
ஏற்பட்ட கோபத்தில் 
அந்த மழை நீர் 
சாலையில் இறங்கி 
மறியலில் ஈடுபடுகிறது...

எனவே... திட்டாதீர்கள்... மழை நீரை!

கேட்பதற்குக் கவிதை போல் இருந்தாலும், 
நெஞ்சம் சுடும் நிஜத்தைச் 
சொல்லிக் கொண்டிருக்கும் காட்சி.

#சென்னை_மழை

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஒரே மாதத்தில் கொத்துக் கொத்தாக கருவேப்பிலை! செடியை அடர்த்தியாக்க இந்த 5 பொருள்களே போதும்!
Waste to Wealth: பழைய பாட்டில், கிழிந்த துணியில் பணம் சம்பாதிக்கலாம்! வேஸ்ட் பொருளில் இருந்து சூப்பர் பிசினஸ் ஐடியாஸ்.!