
வறுமையில் தத்தளித்ததால் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தை காப்பாற்றி குழந்தைகளை ஐஐடி வரை படிக்க வைத்த கிராம மக்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகே இந்திராபுரத்தைச் சேர்ந்தவர் காஜல் ஜா. இவர் 12ஆம் வகுப்பில் 95% மதிப்பெண்கள் பெற்றும் குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை.
இவரின் மூத்த சகோதரரும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இவர்களின் தந்தைக்கு வேலை இல்லாததால் வறுமையில் வாடிய குடும்பத்தினர் 4 பேரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனையறிந்த அந்த கிராமத்து மக்கள் தங்கள் சேமிப்புத் தொகையில் இருந்து ரூ.20,000 திரட்டி காஜல் ஜாவையும் அவரது அண்ணனையும் ஐஐடி கோச்சிங் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தனர்.
மேலும் பற்றாக்குறைக்கு சமூக வலைத்தளங்கள் மூலமும் பணம் திரட்டியுள்ளனர். அவர்களது தந்தைக்கு, நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளர் பணி வாங்கிக் கொடுத்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.