நாளை திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நேரம் ஒதுக்கீடு  : கோவில்  நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

First Published Oct 15, 2016, 6:06 AM IST
Highlights


நாளை திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நேரம் ஒதுக்கீடு  : கோவில்  நிர்வாகம் முக்கிய அறிவிப்பு :

திருவண்ணாமலை  என்றாலே,  கிரிவலம்  தான்  ஞாபகம்  வரும் என்பது அனைவருக்கும்  தெரியும்.

முக்கியமாக , மாதந்தோறும் பெரும்பாலோனோர் கிரிவலம்  செல்வதை  வழக்கமாக  வைத்துள்ளனர் .அவர்களுக்கான  சிறப்பு  நேரத்தை  தற்போது கோவில் நிர்வாகம்  அறிவித்துள்ளது.

அதாவது, சிவபெருமானின் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை. இங்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இதன் கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 14 கி.மீ தூரமாகும். கிரிவலம் செல்லும் போது இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய 8 லிங்கங்களை தரிசிக்கலாம்.


இந்நிலையில் இம்மாதம் பவுர்ணமியை ஒட்டி, கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை மதியம் 12.36 மணிக்கு தொடங்கி, ஞாயிறு காலை 10.27 வரை பவுர்ணமி உள்ளதால், அந்த நேரத்தில் கிரிவலம் சென்றால் சிறப்பானது  என  தெரிவித்துள்ளது.

 

click me!