அசைவ  பிரியர்களுக்கு  சுவையான செட்டிநாடு சிக்கன்  பிரியாணி  ரெடி....!!!

First Published Oct 15, 2016, 4:21 AM IST
Highlights


அசைவ  பிரியர்களுக்கு  சுவையான செட்டிநாடு சிக்கன்  பிரியாணி  ரெடி....!!!

சமைக்க தேவையான நேரம் : 30-40 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:


பாஸ்மதி அரிசி - 3 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2, தேங்காய் - 1
நெய்- 2 மேஜை கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
சிக்கனுடன் ஊற வைக்க
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பி - 2 தே. கரண்டி
அரைத்து கொள்ள வேண்டிய பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1 பெரியது
பூண்டு - 10 பல்
சோம்பு- 2 தே. கரண்டி
கிராம்பு, ஏலக்காய், பட்டை - 1
இஞ்சி - 2 துண்டு
புதினா, கொத்தமல்லி - 1 கைபிடி
முதலில் தாளிக்க
எண்ணெய்+நெய் - 1 மேஜை கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இல்லை - 1
சோம்பு - 1 மேஜை கரண்டி

செய்முறை:

 சிக்கனை சுத்தம் செய்து சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள

பொருட்கள் சேர்த்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைத்து கொள்ளவும்

 அரிசியை பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்

பாத்திரத்தில் நெய் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்

பாத்திரத்தில் நெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் வெங்காயம், அரைத்து வைத்துள்ள மசாலா, தக்காளி, ஊறவைத்துள்ள சிக்கன் என ஒவ்வொன்றாக தனி தனியாக சேர்த்து வதக்கி கொள்ளவும்

3 கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால் 2 கப் தண்ணீர் , தேவையான அளவு உப்பு புதினா இல்லை சேர்த்து ஊற்றி கொதி வந்தவுடன் அரிசியை சேர்க்கவும் அரிசி 3/4 பாகம் வெந்தவுடன் அதனை தம் போடவும்.

சூடான செட்டிநாடு சிக்கன் பிரியாணி ரெடி.

 

 

.

click me!