வீட்டில் யாரும் இல்லாத போது பெண்கள் செய்ய விரும்புவது இதுதான்..!!

By Dinesh TG  |  First Published Nov 27, 2022, 1:11 PM IST

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண்கள் செய்வதற்கு என்று சில விஷயங்கள் உள்ளன. ஆனால் அது நீங்கள் நினைப்பது கிடையாது. அவர்கள் மட்டுமே தங்கள் தனிப்பட்ட தருணங்களில் செய்ய விரும்பும் விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
 


இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் பெண்கள் என்றாலே தனி மரியாதை தான். அவர்கள் அமைதி மற்றும் கண்ணியத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றனர். ஆனால் அதை தான் பெண்கள் விரும்புகிறார்களா? என்பது தெரியாது. உலகம் அவர்களை அப்படித்தான் வரையறுக்க விரும்புகிறது என்பது தான் உண்மையான காரணம். ஆனால் பெண்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களை கட்டுப்படுத்த யாருமில்லாத நேரத்தில், பெண்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று தெரியுமா? வீட்டில் தனியாக இருக்கும் போதும் மற்றும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாத நேரங்களில் பெண்கள் பல சுவாராஸ்யமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அதுகுறித்த தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

உறக்கம்

Latest Videos

நிம்மதியான தூக்கம் எல்லோரும் விரும்பும் ஒன்று. ஆனால் அது பெண்களுக்கு மிகவும் தேவைப்படக்கூடியதாக உள்ளது. பெற்றோர்கள், கணவன், குழந்தைகள் உள்ளிட்டோர் இருக்கும்போது பெண்களுக்கு நிம்மதியான தூக்கம் என்பது சாத்தியமற்றதாக உள்ளது. ஒருவேளை அவர்கள் இருக்கும் போது வற்புறுத்தி தூங்க நினைத்தாலும், உறக்கம் வருவதாக இல்லை. எனவே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண்களும் பெரும்பாலும் தூங்க மட்டுமே விரும்புகின்றனர்.

அரட்டை

அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லாத போது கிடைக்கும் சுதந்திரம் பெண்களுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை. அவர்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் தங்களுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுடன் நீண்டநேரம் பேசுவதற்கு பலரும் விரும்புகின்றனர். அப்போது தனது குடும்பத்தை குறித்தும், குழந்தைகளை பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர். தனக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், அதுகுறித்து புலம்புவதும் நடக்கிறது.

செல்ஃபிக்கள்

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பல்வேறு போஸ்களில் செல்ஃபி எடுப்பதும், ரீல்களை உருவாக்குவதும் இப்போதைய டிரெண்டாக உள்ளது. இந்த நேரத்தில், பெண்கள் தங்கள் சொந்த பரிசோதனைகள் மூலம் உருவாக்கிய மற்றும் பல்வேறு போஸ்களில் செல்ஃபி எடுத்து அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். சில சமயங்களில், ஆடை அணிந்து புதிய தோற்றத்தை உருவாக்கி, செல்ஃபி எடுத்து அதை ஒரு ஸ்டேட்டஸாக வைப்பதும் நடக்கிறது.

இந்த 5 உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்... மூச்சு திணறல் பிரச்னை வரவே வராது..!!

ஒப்பனை

பெண்கள் தங்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல்கள் மற்றும் மேக்கப் பரிசோதனைகள் செய்ய வேண்டிய நேரமாகவும் அது அமைகிறது. வீட்டில் யாரும் இல்லாத போது, யாரும் பார்க்காமல் முழு சுதந்திரத்துடன் செய்து விடலாம் என்ற மனநிலை பரவலாக காணப்படுகிறது. சில நேரங்களில் பெண்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தின் மேக்கப் அல்லது ஹேர் ஸ்டைலை பரிசோதித்து வருவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

சமையலறை பரிசோதனை

வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் சமைப்பதில் பரிசோதனை செய்ய விரும்பும் பல பெண்கள் உள்ளனர். ஏனெனில் தாய்மார்கள் இருக்கும் போது சில சமயங்களில் பரிசோதனைக்கு உடன்பட மாட்டார்கள். உணவு வீணாகிவிடும், அல்லது எண்ணெய் தீர்ந்துவிடும், அல்லது எரிவாயு தீர்ந்துவிடும். இருப்பினும், பெண்கள் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் யூடியூப்பில் பார்த்த விஷயங்களை முயற்சிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
 

click me!