Ginger Tea Side Effects : இஞ்சி டீ யில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்பட்டாலும் சிலர் அதை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அது யார் யார் என்று இங்கு பார்க்கலாம்.
மழை காலத்தில் அனைவரும் இஞ்சி டீ குடிக்க விரும்புவார்கள். பல இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இஞ்சியின் வெப்பத்தன்மை காரணமாக டீ மட்டுமின்றி, காய்கறிகள் மற்றும் சட்னி வரை அனைத்து தயாரிப்புகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி உணவின் சுவை அதிகரிப்பதோடு, சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இஞ்சியின் பல பண்புகள் குறித்து ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்று வரை நீங்கள் அதன் பலன்களை பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சிலருக்கு இது நல்லதல்ல என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த வகையில் இன்று இந்த கட்டுரையில் இஞ்சி டீ யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இஞ்சி டீ யாரெல்லாம் குடிக்க கூடாது?
1. சர்க்கரை நோய் உள்ளவர்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இஞ்சி டீ அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. அப்படி குடித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து, அது மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
2. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள்:
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், இரத்த அழுத்தம் குறைந்து இதய படபடப்பு ஏற்படும். படபடப்பை ஏற்படுத்தும்.
3. பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள்:
பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ குடித்தால் பித்த நீர் அளவுக்கு அதிகமாக சுரந்து, வேதனை மிகுந்த வலியை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: மூட்டு வலிக்கு குட்பை சொல்ல நேரம் வந்தாச்சு! சூப்பரான 'மூலிகை டீ'.. ஒன் டைம் குடிங்க.. ஆயுசுக்கும் வராது!!
4. உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள்:
உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் இஞ்சி டீ குடிப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இஞ்சி டீ குடித்தால் உணவு சீக்கிரமே செரித்துவிடும் மற்றும் எடையும் குறைந்துவிடும்.
5. கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்பிணி பெண்கள் வாந்தி, குமட்டல் சமயத்தில் இஞ்சி டீ குடிக்க விரும்புவார்கள். ஆனால், அவர்கள் ஒருபோதும் இஞ்சி டீ குடிக்கவே கூடாது. மீறினால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
6. குறைவான இரத்தம் உள்ளவர்கள்:
இஞ்சி டீ ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையை கொண்டதால், குறைவான இரத்த அழுத்தம் மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் ஒருபோதும் இஞ்சி டீ குடிக்கவே கூடாது.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் இந்த 5 வகையான தேநீர் அருந்துங்கள்; சளி, இருமல் தொல்லை நீங்கும்..உடல் ஆரோக்கியமாக இருக்கும்!!
7. அல்சர் பிரச்சனை உள்ளவர்கள்:
அல்சர் மற்றும் சிறுகுடல் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், அது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
8. மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள்:
பாதிக்கப்பட்ட அதற்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இன்று குடிக்கவே கூடாது. மீறினால், அது மருந்துகளுடன் வினைபுரிந்து மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இஞ்சி டீ அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் பிரச்சனைகள்:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D