உணவுக்கு பிறகு பெருஞ்சீரகம் சாப்பிட சொல்றாங்களே; அது ஏன் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

By Kalai Selvi  |  First Published Jul 20, 2024, 11:42 AM IST

Sombu Benefits Benefits : பெருஞ்சீரகம் செரிமானத்தை மேம்படுத்தும் ஒரு இயற்கை அருமருந்து. இதை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அளப்பரியவை.


பெருஞ்சீரகம் ஒரு சிறந்த மவுத் பிரஷ்னர் ஆகும். இதை பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் ஹோட்டலில் சாப்பிட சென்றால் உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் சாப்பிட கொடுப்பார்கள். இது செரிமான சக்தியை அதிகரிக்கவும், வாய் துர்நாற்றத்தை நீக்கவும், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவுகிறது. ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் அற்புதமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.

இதையும் படிங்க: இதய ஆரோக்கியம் முதல் ரத்த சோகையை தடுப்பது வரை.. சோம்பு பாலில் உள்ள ஆச்சர்யமூட்டும் நன்மைகள்..

Tap to resize

Latest Videos

கால்சியம், சோடியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்கள் பெருஞ்சீரகத்தில் உள்ளது. இது தவிர, அதன் நறுமணமும் மிகவும் அற்புதமாக இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான அமைப்பில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. உங்களுக்கு இந்தப் பழக்கம் இல்லை என்றால், இனிமேல் நீங்களும் சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பின்வரும் ஆரோக்கிய நன்மைகளை பெறுவீர்கள்.

இதையும் படிங்க:  Fennel seed: பெருஞ்சீரகத்தை காலையில் இப்படி பயன்படுத்துங்கள்?சுகர் மற்றும் உடல் எடை பிரச்சனைக்கு பெஸ்ட் தீர்வ!

பெருஞ்சீரகத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. இரவு உங்களுக்கு சரியாக தூக்கம் வராமல் விட்டால் சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகம் சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள். இரவில் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

2. முடி உதிர்வு அதிகமாக இருந்தால் தினமும் பெருஞ்சீரகம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.

3. உங்கள் நினைவாற்றல் பலவீனமாக இருந்தாலோ அல்லது உங்கள் மூளை கூர்மையாக வேலை செய்யவில்லை என்றாலோ நீங்கள் தொடர்ந்து பெருஞ்சீரகம் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் கூர்மையாக இருக்கும்.

4. மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால் பெருஞ்சீரகம் சாப்பிடுங்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் வந்தால் இது உடனடி நிவாரணம் அளிக்கும்.

5. பெருஞ்சீரகத்தை நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அது ரத்தத்தை சுத்தப்படுத்தி, சருமத்தையும் மேம்படுத்தும்.

6. வாய் துர்நாற்றத்தால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், அரை ஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தவறாமல் சாப்பிடுங்கள். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றத்தில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

7. பெருஞ்சீரகம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் சரியான செரிமானத்தை பராமரிக்கும் திறன் உடையது. அதுமட்டுமின்றி, இது எடையையும் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

8. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

9. நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்கள் என்றால் பெருஞ்சீரகம் சாப்பிடுங்கள். இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

10. பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இது ஆரோக்கியமான கண்பார்வைக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதை நீங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால், கண்புரை மற்றும் பிற கண் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கலாம். 

11. பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது முதுமையை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. அதுமட்டுமின்றி நம் சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்தி அழகாகவும் காட்டுகிறது.

12. பெருஞ்சீரகத்தில் சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது அலர்ஜி எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது மற்றும் கீழ்வாதம் போன்ற பிற பிரச்சனைகளையும் நீக்க உதவுகிறது.

13. முக்கியமாக பாலுட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்க சோம்பு தவறாமல் சாப்பிட வேண்டும்.

click me!