Mixi: மிக்ஸியில் போட்டு அரைக்க கூடாத பொருட்கள் இவை தான்!

By Dinesh TGFirst Published Dec 10, 2022, 5:06 PM IST
Highlights

சில பொருட்களை மட்டும் மிக்ஸியில் போட்டு அரைக்க கூடாது. அவை என்னென்ன பொருட்கள் என்பதை பார்ப்போம்.
 

வீட்டு சமையலறையில் நாம் பொதுவாக பயன்படுத்தும் உபகரணம் மிக்ஸி. இந்த உபகரணம் இன்றி எந்த வேலையும் ஓடாது. அந்த அளவிற்கு மிக்ஸி, சமையலறையில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பல வேலைகளை மிகச் சுலபமாக முடித்துக் கொடுக்கிறது இந்த மிக்ஸி. அம்மிக்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட மிக்ஸி, தற்காலத்தில் அனைவரது வீட்டு சமையலறையிலும் இடம் பிடித்து விட்டது.

பழங்காலத்தில் இந்தப் பரச்சனையே இல்லை. ஏனெனில், அப்போதெல்லாம் அனைத்துப் பொருட்களையும் அரைப்பதற்கு அம்மி தான் பயன்பட்டு வந்தது. அம்மியில் அரைத்து செய்யப்படும் உணவுகள் அனைத்தும் அவ்வளவு சுவையாக இருக்கும். மேலும், ஆரோக்கியமானதும் கூட. இதில் அரைப்பதற்கு நேரம் சற்று அதிகமாகும். ஆனால், இப்போது பயன்படுத்தப்படும் மிக்ஸி நேரத்தை மிச்சப்படுத்தி கொடுப்பதால், இன்றைய தலைமுறையினர் இதனை அதிகம் விரும்புகின்றனர்.

மிக்ஸியின் பயன்பாடு நாளுக்கு நாள், அனைத்து நாடுகளிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமையலறையில் ஓர் முக்கிய அங்கமாகவே மிக்ஸி மாறிவிட்டது எனலாம். இருப்பினும், சில பொருட்களை மட்டும் மிக்ஸியில் போட்டு அரைக்க கூடாது. அவை என்னென்ன பொருட்கள் என்பதை பார்ப்போம்.

மிக்ஸியில் அரைக்க கூடாத பொருட்கள்

முழு மசாலாப் பொருட்கள்

வீட்டில் நாம் அரைத்துப் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில் சுவை மிக அதிகமாக இருக்கும். இதற்காக முழு மசாலாப் பொருட்களை அப்படியே மிக்ஸியில் போட்டு அரைக்க கூடாது. இது முற்றிலும் தவறாகும். இப்படிச் செய்வதால் மிக்ஸி பழுதாகி விடும். ஆகவே அதனை சிறிதளவேனும் கையில் இடித்து, பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காபி கொட்டைகள்

சிலர் சுத்தம் நிறைந்த மற்றும் மிகவும் சுவையான காபியை குடிக்க, வீட்டிலேயே காபி கொட்டைகளைத் தூள் செய்வார்கள். ஆனால், காபி கொட்டைகளைத் தூள் செய்ய மிக்ஸியைப் பயன்படுத்த கூடாது. இப்படிச் செய்வதாலும் மிக்ஸி பழுதாக வாய்ப்புள்ளது.

நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள “ஹெர்பல் சூப் “

குளிர் பொருட்கள்

பழச்சாறு தயாரிக்கும் நேரத்தில், சிலர் ஐஸ் கட்டிகளை முழுதாகவே மிக்ஸியில் போடுவார்கள். இதன் காரணமாக மிக்ஸியின் பிளேடுகள் மற்றும் கொள்கலன் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது.

சூடான பொருட்கள் 

நம்மில் சிலர், மிகவும் சூடான பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைக்கிறார்கள். சூடான பொருட்கள் தரும் அழுத்தத்தின் காரணமாக உங்கள் மிக்ஸி ஜார் வெடிக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

click me!