கால்பந்து வீரர்களின் பச்சை குத்தல்கள் தனித்துவமானது, ஒருவர் தனது மனைவியின் உதடுகளை தனது உடலில் டாட்டூ செய்து கொண்டார் மற்றொரு வீரர் னது தாய் மற்றும் சகோதரியின் முகத்தை பச்சை குத்தியுள்ளார்.
இப்போதெல்லாம் பொதுமக்கள் பலரிடமும் பச்சைக்குத்திக் கொள்ளும் மோகம் அதிகரித்துள்ளது. . ஃபேஷன் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமின்றி, பிரபலமான துறையில் இருக்கும் பலரும் டாட்டூ மீது ஆர்வங்காட்டி வருகின்றனர். இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு டாட்டூ மீது தீராத காதல் உள்ளது. அவர் தனது உடலில் 11 பச்சை குத்தியுள்ளார். அந்த வரிசையில் கால்பந்தாட்ட வீரர்களும் பச்சைக்குத்துதலில் கவனமீர்க்கின்றனர். பிரபல பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட வீரர் நெய்மர் முதல் பார் போற்றும் மெஸ்சி வரையிலான பல கால்பந்து வீரர்களும் டாட்டூ குத்துவதில் அதிக ஆர்வங்கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம், தனது மனைவி விக்டோரியாவின் பெயரை இந்தி மொழியில் பச்சைக்குத்திக் கொண்டுள்ளார். அதேபோல பல வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் ’ஓம் நம சிவாயா’ என்கிற மந்திர உச்சாடனையை பச்சைக் குத்தியுள்ளனர்.
லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு பச்சை குத்துவது என்றால் கொல்ல ஆசை. அவர் தனது உடலில் சுமார் 5 இடங்களில் பச்சைக் குத்தியுள்ளார். அவரது தாயார் செலியாவின் பெயர் அவரது முதுகில் பச்சைக்குத்தியுள்ளார். மகனின் பெயரை காலில் டாட்டூ செய்துள்ளார். மேலும் அவரது மூன்று மகன்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் பிறந்த தேதியும் வலது காலில் எழுதப்பட்டுள்ளது. அவர் தோளில் இயேசு கிறிஸ்துவின் உருவத்தை வரைந்துள்ளார். மேலும் இவருடைய டாட்டூக்களில் பலரையும் ஈர்த்தது, மெஸ்ஸியின் இடுப்பில் இருக்கும் டாட்டூ தான். அந்த இடத்தில் மெஸ்ஸி தனது மனைவியின் உதடுகளை பச்சைக் குத்தியுள்ளார்.
ஆண்டர்சன்
பிரேசிலின் கோல்கீப்பர் ஆண்டர்சன்னும் பச்சைக்குத்துவதில் ஆர்வமுடன் உள்ளார். அவர் கழுத்தில் வரையப்பட்டுள்ள ரோஜா மற்றும் மண்டை ஓடு டாட்டூக்கள் உலகளவில் மிகவும் பிரபலம். இது தவிர, முதுகில் இறக்கைகள் மற்றும் காலில் கோப்பை என பல்வேறு இடங்களில் பச்சைக்குத்தியுள்ளார். நமக்கு தெரிந்து இவ்வளவு தான். ஆனால் தெரியாமல் இன்னும் நிறைய இருக்கும் என்று, ரகசிய தகவல்கள் கூறுகின்றன.
நெய்மர்
கால்பந்தாட்ட வீரர்களில் அதிகமான உடல் பாகங்களில் பச்சைக்குத்திக் கொண்ட வீரர் என்பதை பட்டியலிட்டால், அதில் முதலிடத்தில் இருப்பவர் நெய்மர் தான். உலகம்போற்றும் பிரேசிலின் விளையாட்டு வீரர் நெய்மருக்கு, பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் நெய்மர் ஒரு பெரிய சூப்பர்ஸ்டாராக அங்குள்ள கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவருடைய ஆட்டத்துக்கு இணையாக, நெய்மரின் டாட்டூக்களும் உலகப் பிரபலமாகும். அவர் உடலில் 2-4 அல்ல, 40 இடங்களில் டாட்டூ போட்டுக்கொண்டுள்ளார். நெய்மரின் பச்சை குத்தல்களில் மிகவும் அழகானது என்றால், தனது தாய் மற்றும் சகோதிரியின் முகங்களை பச்சைக்குத்தியிருப்பது தான். அதன்மூலம் நெய்மருக்கு இணையான புகழ் அவருடைய தாய் மற்றும் சகோதிரிக்கு உலகளவில் கிடைத்துள்ளது.
மெம்பிஸ் டீப்
டச்சு கால்பந்து வீரர் மெம்பிஸ் டீப்புக்கு பச்சைக்குத்துவது பைத்தியம் பிடித்தது போன்றாகும். அவரை கால்பந்தாட்ட வீரர்களில் டாட்டூ ராஜா என்றே குறிப்பிடலாம். அவர் தனது முதுகில் சிங்கத்தை பச்சை குத்தியுள்ளார், அதனால் அவர் ஷேர் தில் இன்சான் என்று இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
தியோ வால்காட்
இந்து மதத்தால் ஈர்க்கப்பட்ட அர்செனல் கால்பந்து வீரர் தியோ வால்காட், தனது முதுகில் ஓம் நம சிவாயா என்கிற மந்திர உச்சாடனையை பச்சைக் குத்தியுள்ளார். அவர் இந்த பச்சை குத்தியவுடன், அவர் ஒரு ட்வீட் போட்டார். அதில் அனைவரும் உங்கள் இதயத்தை திறந்து, உங்களிடமிருந்து பயம், வெறுப்பு மற்றும் பாகுபாட்டை நீக்குங்கள் என்று பதிவிட்டு இருந்தார். அப்போது இது உலகளவில் பிரபலமானது.