கடினமான சமயங்களை எதிர்கொள்ளும் துணைக்கு உறுதுணையாக இருப்பது எப்படி..?

By Dinesh TGFirst Published Dec 4, 2022, 3:58 PM IST
Highlights

எப்போதும் உங்களுடைய துணையுடன் நீங்கள் இணைந்தே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது உண்டு. அதற்கு குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொள்வது நேரடியாக அருகே இருப்பது போன்ற உணர்வை தரும். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் குறுஞ்செய்திகள் அனுப்பாமல் இருப்பது உறவுக்கு நல்லதாக அமைகிறது.
 

அனைவருக்கும் காதல் உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் எந்த உறவும் சிரித்துக்கொண்டே இருப்பது போன்று அமைந்துவிடாது. நம்முடன் ஒருவர் இணைந்து வாழ்வது தீமை மற்றும் நன்மைகள் என இரண்டையும் ஏற்படுத்துகிறது. எனினும், தங்களுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகளை இருவரும் இணைந்து எவ்வாறு கையாளுகின்றனர் என்பதில் தான் முதிர்ச்சியுள்ளது. பலரும் போனில் பேசுவதை விடம் குறுஞ்செய்திகளில் இணைந்திருப்பதை பெரிதும் விரும்புகின்றனர். குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொள்வது உறவை நேரடியாக வளர்க்க உதவுவதாக பலரும் நம்புகின்றனர். ஆனால் எல்லா நேரங்களிலும் எண்ணங்கள் அப்படி இருப்பது கிடையாது. குறிப்பிட்ட சமயங்களில் குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொள்ளாமல் இருப்பது பெரிதும் உதவும். அதுகுறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.

முதல் சந்திப்பு

முதன்முதலாக நீங்கள் விரும்பும் நபரை சந்திக்கிறீர்கள் அல்லது அவர்களுடன் வெளியில் சுற்றுகிறீர்கள் என்பது சிறப்பான ஒரு உணர்வு தான். அதற்கு பிறகு உறவை தொடர்வது தான் மிகவும் முக்கியம். அந்த சந்திப்பு உங்களுக்குள் ஏற்படுத்தும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த உறவின் புரிதல் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். முதல் சந்திப்புக்கு பிறகு அவசர கதியில் நீங்கள் ஏதாவது செய்துவிட்டால், உங்களை பலவீனம் கொண்டவராக காட்டிவிடும். மேலும் ஆழம் தெரியாமல் முடிவு எடுக்க தோன்றும். அதனால் முதல் சந்திப்பு அல்லது முதன்முதலாக வெளியே சென்று வந்தவுடன் சிறிது நாட்கள் கழித்து உரையாடலை தொடருங்கள். 

ஆண்குறி சிறியதாக இருப்பதாக நினைத்து கவலைப்படும் ஆண்களே, பெண்கள் சொல்வதை கேளுங்கள்..!!

கோபம்

உங்கள் காதலர் / காதலி உங்கள் மீது கோபமாக இருந்தால், நீங்கள் பேசத்தான் வேண்டும். ஆனால் புறக்காரணங்களால் துணை கோபமாக இருந்தால், உங்களிடம் எதிர்பார்த்தால் மட்டும் பேசுங்கள். இல்லையென்றால், அவர்கள் அவர்களுடைய கோபத்தை கையாளுவதற்கு தனியாக நேரம் கொடுங்கள். அதை புரிந்துகொள்ளாமல் சமாதானம் செய்கிறேன் என்று, நீங்கள் எதையாவது செய்யப் போனால், அது உங்கள் இருவருக்குமிடையில் பிரச்னையை ஏற்படுத்திவிடும். பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு முன் நீங்களும் உங்கள் துணையும் அமைதியாக இருக்கவேண்டும். அதை தொடர்ந்து பிரச்னைக்கான தீர்வு குறித்து இருவரும் சிந்தியுங்கள்.

பிஸி

உங்களுடைய துணை, அலுவலகம் சார்ந்து அல்லது வீடு சார்ந்து அல்லது தனிப்பட்ட காரணங்கள் சார்ந்து பிஸியாக இருந்தால் குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்யாதீர்கள். நாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்று எண்ணி நீங்கள் கோபத்தில் எதையாவது செய்யச் சென்றால், பிரச்னை உங்களுக்கு தான். ஒருசில நேரங்கள் அது உங்களுடைய உறவைக் கூட பாதித்துவிடக்கூடும். உறவில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட இடத்தைக் கொடுத்து, முதிர்ச்சியுடன் செயல்படுங்கள். பிஸியாக இருந்துவிட்டாலும் அவர் எங்கே செல்ல போகிறார். இறுதியாக உங்களிடம் தானே வருவார்.

தவறிவிட்ட செய்திகள்

உங்களுடைய பார்டனர் அல்லது காதலர் தவறிவிட்ட செய்திகளை மீண்டும், மீண்டும் அனுப்பி அவர்களிடம் பதில் கேட்டு பெறும் பழக்கம் பலரிடையே நிலவுகிறது. இது ஆண்களிடத்திலும் உள்ளது, பல பெண்களிடத்திலும் காண முடிகிறது. நீங்கள் அப்படி செய்தால், பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் கூட, அந்த எண்ணம் மாறிவிடும். மேலும், உங்களுக்கு பேசுவதற்கு வேறு முக்கியமான விஷயம் எதுவுமில்லை. அதனால் தான் இப்படி குறுஞ்செய்தி அனுப்பி உயிரை வாங்குகிறீர்கள் என்கிற மனநிலை தோன்றும். அப்போது உறவில் உங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துபோக அதிக வாய்ப்புள்ளது.
 

click me!