எந்த திசை நோக்கி குளிக்க வேண்டும், சாப்பிட்டவுடன் குளிக்கலாமா?

Published : Dec 02, 2022, 12:19 PM IST
எந்த திசை நோக்கி குளிக்க வேண்டும், சாப்பிட்டவுடன் குளிக்கலாமா?

சுருக்கம்

நமது உடல்தான் ஒவ்வொருவருக்கும் கோவில் போன்றது. உடலை பேணி காப்பதும் ஒரு கலைதான். எவ்வாறு குளிக்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். இந்த நேரத்தில் குளிக்க வேண்டும், தேய்த்து குளிக்க வேண்டும், குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும், வாரத்தில் இத்தனை நாட்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

குளிக்கும் நேரம் மட்டுமின்றி, குளிக்கும் திசையும்  முக்கியமானது. இதை மூடப்பழக்கம் என்று கூறுவோரும் உண்டு. 
இருவேளை குளிக்க வேண்டும், குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும், காலை காலை 6 மணிக்குள்ளும், மாலை 6 மணிக்குள்ளும் குளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஒரு நேரம் மட்டுதான் குளிக்க முடியும் என்று கூறுபவர்கள் அதிகாலை 4.30 மணியில் இருந்து காலை 8 மணிக்குள் குளித்துவிட வேண்டும். அவ்வாறு செய்தால் உடலில் வெப்பம் சீராக இருக்கும். 

தினமும் நாம் வீட்டில் குளிக்கும்போது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று குளிக்கலாம். இறப்புக்கு சென்று வந்தால், அல்லது மயானத்திற்கு சென்று வந்தால் தெற்கு நோக்கி குளிக்க வேண்டும் என்றும், மேற்கு நோக்கி குளித்தால் உடல் வலி ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். 

சாப்பிடுவதற்கு முன்பு குளித்து விட வேண்டும். குளிக்கும் முன்பு பசித்தது, சாப்பிட்டு விட்டேன் என்று கூறினால், சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கவும். மாமிசம் போன்ற ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டு இருந்தால், நான்கு மணி நேரம் கழித்துதான் குளிக்க வேண்டும்.  

வீட்டில் யாரும் இல்லாத போது பெண்கள் செய்ய விரும்புவது இதுதான்..!!

இதேபோல் உடற்பயிற்சி, யோகா செய்து முடித்தவுடன் குளிக்கக் கூடாது. குறைந்தது 15 நிமிடம் காத்திருந்து பின்னர் குளிக்க வேண்டும். நீரை முதலில் பாதத்தில் ஊற்றி, பின்னர் முழங்கால், பின்னர் இடுப்பு, தோள்பட்டை என்று நீரை ஊற்ற வேண்டும்.  கீழிலிருந்து மேல் நோக்கித்தான் நீரை ஊற்ற வேண்டும். அப்படி குளிக்கும்போது நமது உடலில் இருக்கும் வெப்பம் மண்டை உச்சி வழியாக வெளியேறும். 

முதலில் உடலின் முதுகு பாகத்தை துடைக்க வேண்டும். கீழிருந்து மேல் நோக்கி துடைக்க வேண்டும். இதன் மூலமும் வெப்பம் குறைக்கப்படுகிறது. இத்துடன் தோல் சுருக்கமும் இருக்காது, உடலில் சரும பிரச்சனையும் இருக்காது. மேலும், ஈரத்துண்டினால்தான் உடம்பை துடைக்க வேண்டும். அப்போதுதான் உடலில் இருக்கும் சூடு தணியும். 

மேலும் உடலில் கை கால் என நன்றாக தேய்த்துக் குளிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, உடல் தசைகள் மீண்டும் புத்துயிர் பெறும், ரத்த ஓட்டமும் நன்றாக இருக்கும். அவசரக் குளியல் ஆபத்தாக முடியும். ரத்த அழுத்தம் ஏற்படும்.  நிதானமாக குளிக்க வேண்டும். 

கடல் நீரில் குளிப்பது, திருஷ்டி, தோஷங்களை நீக்கும். குளித்த உடன் சாப்பிடக் கூடாது. 20 நிமிடங்கள் கழித்துதான்  உணவருந்த வேண்டும். 

மொபைல் போன் & மைக்ரோவேவ் ஓவன்களை பயன்படுத்துவது புற்றுநோயிக்கு வித்திடுமா..??

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்