தலைமுடியை கடித்து சாப்பிடும் விநோத பழக்கம் ஏற்படுவது ஏன்..?

By Dinesh TGFirst Published Nov 30, 2022, 4:22 PM IST
Highlights

சிலர் அரிசி உள்ளிட்ட தானிய வகைகள், மண், ஓட உடைக்காத முட்டை உள்ளிட்டவற்றை சாப்பிடும் விநோத பழக்கக்களை கொண்டுள்ளனர். இந்த நபர்கள் பலருக்கு தலை முடியை கடித்துச் சாப்பிடும் பழக்கமும் இருக்கும். எதனால் இதுபோன்ற விசித்திரமான பழக்கங்கள் சிலரிடையே காணப்படுகிறது என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
 

பொதுவாக நீளமாக கூந்தல் இருந்தால், பலருக்கும் பிடிக்கும். ஆனால் நீளமாக முடி இருந்தால் உதிர்வுக்கு வழிவகுக்கும் என்று கூறி, அதை வெட்டிவிடும் பழக்கம் நிறையபேரிடம் உள்ளது. எனினும், அப்படிப்பட்டவர்களுக்கும் நீளமாக கூந்தலை வளர்ப்பது விருப்பமாகவே இருக்கும். இதுபோன்ற நிலைபாடுகளில் இருந்து சற்று விசித்திரமானவராகவே இருந்துள்ளார் இல்லொப்பாக்கே. தனக்கு நீளமாக கூந்தல் இருந்தபோதிலும், அதை வெட்டாமல் கடித்துச் சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், இல்லொப்பாக்கேவுக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து பார்த்தபோது, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவருடைய வயிற்றில் 3 கிலோ எடைக்கொண்ட தலைமுடி சிக்கிக் கிடந்தது. சீனாவில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

3 கிலோ முடியை சாப்பிட்ட இளம்பெண்

சீனாவின்  ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் இல்லொப்பாக்கே. இவருக்கு பிக்கா என்கிற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அழுக்கு, காகிதம், மண் உள்ளிட்ட சாப்பிடுவதற்கு உகாந்தாத பொருட்களை உட்கொள்வார்கள். கடந்த சில நாட்களாக இல்லொப்பாக்கே உணவு எதுவும் சாப்பிட முடியாமல் வயிற்று வலியால் அவதி அடைந்துள்ளார். அதையடுத்து மருத்துவரிடம் சென்று பார்த்த போது, அவருடைய வயிற்றில் தலைமுடி குவியல் குவியலாக இருந்துள்ளது.  பெற்றோரை பிரிந்து வாழ்ந்த வந்த இல்லொப்பாக்கேவுக்கு ஏற்பட்ட பிக்கா நோய் பாதிப்பு, அவரை தலைமுடியை சாப்பிடுவதற்கு உட்படுத்தி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

சானிட்டரி பேடுகளால் புற்றுநோய் ஆபத்து- அதற்கு மாற்று வேறு என்ன..??

வயிற்றில் உணவுக்கு இடமில்லை

உடனடியாக இல்லொப்பாக்கேவுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு, அவருடைய வயிற்றில் இருந்த 3 கிலோ எடையுள்ள முடி உருண்டையை மருத்துவர்கள் அகற்றினர். வயிற்றில் முடி அதிகமாக இருந்ததால், உணவுக்கு இடமில்லாமல் போயுள்ளது. அதனால் வயிற்று வலி ஏற்பட்டு இளம்பெண் அவதி அடைந்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர் வேலைக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். இல்லொப்பாக்கே உடன் ஒரு மூதாட்டி இருந்தபோதிலும், வயது மூப்பின் காரணமாக கவனிக்காமல் இருந்துள்ளார். பல வருடங்களாக மனநலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததால்  இல்லொப்பாக்கேவுக்கு பிக்கா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து தலைமுடியை பிய்த்து சாப்பிட்டு வந்ததால்,  இல்லொப்பாக்கே தலை சொட்டையாகிவிட்டது. அவருக்கு மொத்தம் 2 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த முடிப் பந்தை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இளம்பெண்  இல்லொப்பாக்கேவுக்கு சிகிச்சை அளித்த இரைப்பை குடல் மருத்துவர் ஷியான் டாசிங் பேசும் போது, நல்லவேளையாக உரிய சிகிச்சை அளித்ததால் இல்லொப்பாக்கேவை காக்க முடிந்தது. இல்லையென்றால் மிகவும் ஆபத்தாகி இருக்கும். குழந்தைகள் வளரும் சூழலை பெற்றோர்கள் கவனிப்பது முக்கியம் என்று தெரிவித்தார்.

முடி உண்பது ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன. 2017 ஆம் ஆண்டில், பிரிட்டனில் 16 வயது மாணவி தனது வயிற்றில் முடி உதிர்ந்ததால் ஏற்பட்ட தொற்றுநோயால் திடீரென இறந்தார் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் கூற்றுப்படி, முடியை விழுங்கும் நோயாளிகள் ரேப்ன்சல் நோய்க்குறியால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ட்ரைக்கோபேஜியா எனப்படும் மனநலக் கோளாறால் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

click me!