மின் அடுப்பை நேரடியாக ஸ்விட்சு பாக்ஸுடன் இணைக்ககூடாது- ஏன் தெரியுமா?

By Dinesh TGFirst Published Nov 29, 2022, 5:02 PM IST
Highlights

எரிவாயுவை சிக்கனம் பிடிக்க பலரும் மின்சார அடுப்பை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், அதை பயன்படுத்துவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. அதை பலரும் அறிந்து வைத்திருப்பதாக தெரியவில்லை. அதுகுறித்து விரிவக தெரிந்துகொள்வோம்.
 

எரிவாயு விலை மாதந்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒரு சிலிண்டர் உருளை வாங்க வேண்டுமானால் சாமானியர்கள் பாடு திண்டாட்டமாகி வருகிறது. அதனுடைய தொடர் விலையேற்றம் காரணமாக பலரும் மின்சார அடுப்பை மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர். சமைப்பதற்கு இண்டக்‌ஷன் ஸ்டவ் என்று சொல்லப்படும் மின் அடுப்பு சரியான தேர்வு தான். இருந்தபோதிலும் ஒரு சாதாரண அடுப்பை ஒப்பிடும்போது மின் அடுப்பின் பயன்பாடு வேறுமாதிரியானது. அதைப் பயன்படுத்தும் போது சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதுகுறித்த தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

இண்டக் ஷன் ஸ்டவ் பயன்படுத்தும் போது, அதற்கென்று தனியாக விற்பனை செய்யப்படும் பாத்திரங்களை கொண்டு சமைக்கவும். பொதுவாக மின் அடுப்பில் மண் பாத்திரங்கள், அலுமினிய பாத்திரங்கள், இண்டோலியம் பாத்திரங்கள் கொண்டு சமைக்க முடியாது. 

சாதாரண எரிவாயு அடுப்பை சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்கிறோம். ஆனால் அப்படி மின் அடுப்பை சுத்தம் செய்ய இயலாது. அப்படி செய்தால் அடுப்பு உடைந்துவிடும். அதனால் எப்போதும் மென்மையான துணியால் துடைக்கவும். அதேபோன்று மின் அடுப்பை சுத்தமான பராமரிப்பது மிகவும் முக்கியம். 

தூசி மற்றும் அழுக்கு தூண்டல் அடுப்பின் துளைகளுக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் கேஸ் அடுப்புக்கு அருகில் இண்டக்ஷன் அடுப்பை வைத்திருப்பார்கள். தற்செயலான வாயு கசிவு எப்போதும் சாத்தியமாகும். அதனால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும்.

இண்டக்ஷன் ஸ்டவ் பிளக்கை நேரடியாக ஸ்விட்சு போர்டில் இணைக்கக்கூடாது. கூடுதலான பீஸ் கட்டைகளுடன் கூடிய ஸ்விட்சு பாக்ஸ் வாங்கி வந்து, அதனை பயன்படுத்த வேண்டும். அதேபோன்று மின் அடுப்பை டிவி மற்றும் கம்ப்யூட்டர்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். காந்தப்புல விளைவு காரணமாக அடுப்பிலோ அல்லது மின்னணு பொருட்களிலோ சேதம் ஏற்படலாம்.

மின்னோட்டத்தின் உதவியுடன் இண்டக்‌ஷன் ஸ்டவ் வேலை செய்கிறது. இது பீங்கான் ஓடுகள், சிமெண்ட் தளம் மற்றும் மரத் தளங்களில் வைக்கப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அது ஒரு உலோக மேற்பரப்பில் வைக்கப்படக்கூடாது. இவ்வாறு செய்தால் மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகளவில் உள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத போது பெண்கள் செய்ய விரும்புவது இதுதான்..!!

இண்டக்ஷன் அடுப்பில் தவறுதலாக சிறு விரிசல்கள் தோன்றினாலும், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சமைத்த உடனேயே, சுவிட்ச் ஆஃப் செய்து, பிளக்கை துண்டித்துவிட வேண்டும். உலோகப் பொருட்கள், காகிதம், துணிகளுக்கு அருகில் இண்டக்ஷன் அடுப்பை வைக்கவே கூடாது. 

தூண்டல் அடுப்பில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அடித்தளம் கொண்ட  பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சில அடுப்புகள் இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவது போன்று தயாரிக்கப்படுகிறது. அதுகுறித்து கடைக்காரர்களிடம் கேட்டு தெளிவுப் பெற்று, இண்டக்‌ஷன் ஸ்டவ்வில் இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துங்கள்.

இது மின்னோட்டத்துடன் வேலை செய்வதால், அதை தண்ணீரிலிருந்து விலக்கி வைப்பது நல்லது. ஈரமான தரையில் அடுப்பை வைத்து சமைக்க வேண்டாம். குழந்தைகளையும் சிறார்களையும் இண்டக்‌ஷன் ஸ்டெவ் அடுப்புக்கு பக்கத்தில் சேர்க்க வேண்டாம். அவர்கள் இருக்கும் இடத்தில் இண்டக்‌ஷன் ஸ்டெவ் இருந்தால், மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

click me!