கடந்த 1996-ம் ஆண்டு மறைந்த பாபா வாங்கா என்பவர், 2022-ம் ஆண்டு சைபீரியாவில் ஒரு ஆபத்தான வைரஸ் கண்டுப்பிடிக்கப்படும், அது உலகையே அச்சுறுத்தும் என்று கணித்தார். அது தற்போது உண்மையாகியுள்ளது.
ரஷ்யாவில் ஆழமாகப் புதைந்திருந்த 48,000 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸை விஞ்ஞானிகள் குழு கண்டுப்பிடித்த செய்தி உலகளவில் பரபரப்பை கிளப்பியது. ஆனால் இந்த தகவலை பல ஆண்டுகளுக்கு முன்பு பாபா வாங்கா என்பவர் உலக மக்களுக்கு தெரிவித்துவிட்டார். அதாவது 2022-ம் ஆண்டு சைபீரியா ஒரு புதிய வைரஸை உலகிற்கு அறிமுகம் செய்யும் என அப்போது அவர் கணித்திருந்தார். தற்போது பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகியுள்ளது. இதனால் அவருடைய மற்ற தீர்க்கதரிசனங்கள் குறித்த செய்திகளை மக்கள் ஆர்வமுடன் தேடி வருகின்றனர். ஒருசிலர் அவருடைய வேறு சில தீர்க்க தரிசனங்கள் உண்மையாகிவிடுமோ என்கிற அச்சநிலைக்கு சென்றுவிட்டனர். அதற்கு காரணம், இந்த வைரஸை போன்று பல்வேரு பயங்கரமான கணிப்புகளை அவர் முன்னரே கூறிச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் போன்றவற்றின் விளைவுகளால், 48,000 ஆண்டுகளுக்கு முன் பனியில் சிக்கிய வைரஸ் சைபீரியா பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்தால், பனிமூட்டத்தில் சிக்கியுள்ள பல வகையான வைரஸ்கள் மீண்டும் உயிர்ப்பித்து உலகைக் கொல்லும் என்ற அச்சம் இதனால் ஏற்பட்டுள்ளது.
பாபா வாங்காவின் மற்ற தீர்க்கதரிசனங்கள் என்ன?
சைபீரியாவில் உறைந்து புதைந்து கிடக்கும் வைரஸை ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கண்டுபிடிக்கும் என்று பாபா வங்கா கணித்தார். அது நடப்பாண்டில் உண்மையாகிவிட்டது. அப்போது அவர், அந்த வைரஸ் கட்டுப்பாட்டை மீறி தொற்றுநோயாக பரவும் என்று கூறியுள்ளார். இதனால் உலகளவில் பலரிடையே அச்சம் பரவியுள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டுக்குள் உலகின் முக்கிய நகரங்கள் குடிநீரின்றி தவிக்கும் என்று வாங்கா கூறியிருந்தார். அதுவும் உண்மையாகிப் போனது. இதனுடன், 2022ல் ஆஸ்திரேலியா கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று கணித்தார். அதுவும் உண்மையாகிவிட்டது.
2023-ம் ஆண்டு குறித்து பாபா வங்கா என்ன சொன்னார்?
1. ஒரு பெரிய நாடு உயிரியல் ஆயுதங்களால் மக்களைத் தாக்குகிறது.
2. சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி 2023 இல் ஏற்படும், இது கிரகத்தின் காந்த கவசத்தை கடுமையாக சேதப்படுத்தும்.
3. 2023ல் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும். வேற்றுகிரகவாசிகள் பூமியைத் தாக்கலாம் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் அதில் இறக்க நேரிடும்.
4. அணுமின் நிலையத்தில் ஒரு வெடிப்பு ஏற்படலாம், இதனால் நச்சு மேகங்கள் ஆசியா கண்டத்தை மூடுகின்றன, இதன் விளைவாக பல நாடுகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
5. 2023-க்குள் மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள். இங்கிருந்து மக்களின் தோற்றம், தோல் நிறம் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, ஒரு ஆய்வகத்தில், மனித விருப்பப்படி ஒரு குழந்தையை உருவாக்க முடியும்.
இதையெல்லாம் படித்தாலே குலை நடுங்குகிறது அல்லவா? ஆம், இதெல்லாம் தான் பாபா வங்கா கூறிய தீர்க்கதரிசனங்கள்.
யார் இந்த பாபா வங்கா?
பாபா வங்கா 1911 இல் பல்கேரியாவில் பிறந்தார். இவரின் உண்மையான பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. கடுமையான புயல் விபத்தில் 12 வயதில் கண்ணை இழந்தார். அன்றிலிருந்து தான் மானசீக தரிசனம் பெற்றதாகக் கூறியுள்ளார். 1996 இல் அவர் இறப்பதற்கு முன், அவர் பல தீர்க்கதரிசனங்களைச் செய்தார், அவை அனைத்தும் இப்போது உண்மையாகி வருகின்றன. அவருக்கு மனித சக்தியை மீறிய திறன்கள் இருப்பதாக நம்பப்பட்டது. இந்த பாபா வாங்கா வரும் 5079- ம் ஆண்டு வரை தன்னுடைய கணிப்புகளை கூறிச் சென்றுள்ளார். அவை ஒவ்வொன்றும் இன்னும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.