Blue Skin Man : ஊட்டச்சத்து கிடைக்க வேண்டிய ஆசைப்பட்டு முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

By Dinesh TG  |  First Published Dec 8, 2022, 10:37 AM IST

அமெரிக்காவில் ஒரு நபர் கடந்த 10 ஆண்டுகளாக டையட்ரி சப்ளிமெண்ட்ஸை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தார். இதனால் அவருடைய தோல் நீள நிறமாக மாறிவிட்டது. இதற்கான காரணம் அதிர்ச்சியை கிளப்புகிறது.
 


கடந்த சில வருடங்களில் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக உணவுப் பழக்கவழக்கத்தில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உடல் நலத்தை மேம்படுத்த அதிகளவு மாத்திரைகளை உட்கொள்வதால் அதிகமான நோய்கள் ஏற்படுகின்றன. 

முன்னதாக மனிதர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கொண்டிருந்தனர். இதனால் அவர்களுடைய உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமாக உணவு சாப்பிடுவதிலிருந்து விலகிவிட்டனர். இதனால் வயிற்றில் கோளாறு, ஒவ்வாமை என பல்வேறு பிரச்னைகள் தோன்றுகின்றன. 

Tap to resize

Latest Videos

இதை சரிகட்ட வைட்டமின் மாத்திரைகள், டயட்டரி சப்ளிமெண்ட்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதற்கு தள்ளப்படுகின்றன. இதனுடைய விளைவு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அமெரிக்காவில் ஊட்டச்சத்து வேண்டி வெறும் 10 ஆண்டுகளாக டயட்டரி சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட்டு வந்த நபருக்கு ஒரு விசித்திரமான நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய தோற்றம் நீல நிறமாக மாறிவிட, அவரை இணையவாசிகள் ‘பாப்பா ஸ்மர்ஃப்’ என்று குறிப்பிடுகின்றனர்.

இதை கேட்டால் பலரும் நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் பால் கராசன் தனது தனித்துவமான தோல் நிறத்தால் தொடர்ந்து செய்திகளில் வந்துகொண்டிருந்தார். பல ஆண்டுகளாக டயட்டர் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிட்டு வந்ததன் விளைவாக, அவருடைய சருமம் நீல நிறத்தில் மாறியிருப்பது தெரியவந்தது. அவருடைய தோல் நிறத்தை பார்த்த மக்கள் வியப்படைந்தனர். அவரை நெட்டிசன்கள் உலகளவில் வைரலாக்கினர்.

ஜாம்பி வைரஸ் பற்றி முன்னரே கணித்த பாபா வாங்கா..!! அப்போது என்ன சொன்னார் தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காராசனுக்கு தோல் அழற்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை குணமாக்க செய்தித்தாளில் விளம்பரப்படுத்த ஒரு உணவு சப்ளிமெண்ட்ஸ் பொருளை வாங்கியுள்ளார். அந்த கூழ் வடிவில் இருந்த பொருளை தினமும் சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் தனது உடலில் ஊட்டச்சத்து கூடி, தோல் பிரச்னை நீங்கும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருந்தது. சுமார் 10 ஆண்டுகளாக அந்த பொருளை அவர் சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் படிப்படியாக கரசனின் தோல் நிறம் மாறத் தொடங்கியது. இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது, காராசன் எடுத்து வரும் சப்ளிமெண்டில் இருக்கும் நச்சுத்தன்மை, தோலின் நிறத்தை நீல நிறமாக மாற்றுவது தெரியவந்தது. இது பெரிய விவகாரமாக மாறுவதற்குள், காராசன் சருமம் நீல நிறமாக மாறிவிட்டது. இதையடுத்து குறிப்பிட்ட பொருளை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடை செய்தது. 

குறிப்பிட்ட உணவில் இருக்கும் கலவை ஆர்கிரியா என்ற ஆபத்தான நோயை உண்டாக்குகிறது. அதன்காரணமாகவே காராசன் தோல் நீல நிறமாக மாறியிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது பால் காராசன் உயிருடன் இல்லை. அவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது 62-வது வயதில் காலமானார். எனினும், அவர் தொடர்பான செய்தி இன்றும் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

click me!