Sukran Peyarchi 2022: சுக்கிரன் ராசி மாற்றம்....மே மாதம் முழுவதும் கஜகேசரி யோகம்..பெறப்போகும் 3 ராசிகள்...

Anija Kannan   | Asianet News
Published : May 02, 2022, 07:00 AM IST
Sukran Peyarchi 2022: சுக்கிரன் ராசி மாற்றம்....மே மாதம் முழுவதும் கஜகேசரி யோகம்..பெறப்போகும் 3 ராசிகள்...

சுருக்கம்

Sukran Peyarchi 2022: இந்த மே மாதத்தில் சுக்கிரன் தனது ராசியினை மாற்றி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால் குறிப்பிட்ட சில ராசியினர் கஜகேசரி யோகம் பெற இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மே மாதத்தில் சுக்கிரன் தனது ராசியினை மாற்றி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால் குறிப்பிட்ட சில ராசியினர் கஜகேசரி யோகம் பெற இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இதையடுத்து, இவர் மே மாத இறுதியில் அதாவது மே 23ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். பொதுவாக கிரகங்கள் மாறும் போதெல்லாம் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்:

மே மாதத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம், மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் ஆரம்பமாகும். ஏனெனில், சூரியனுடன் ராகுவும் மேஷ ராசியில் தான் அமர்ந்திருக்கின்றனர். எனவே, இந்த ராசியினருக்கு சூரியனின் சஞ்சாரம் சிறப்பான பலன்களை தரும்.  தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். இவர்கள் அனைவராலும் பாராட்டப்படுவார்கள்.

ரிஷபம்:

மே மாதத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம், ரிஷபம் ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தர இருக்கிறது. ​​தற்போது புதன் ரிஷப ராசியில் சஞ்சரித்து இருப்பதால், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கும். திருமண காரியங்கள் கைகூடும். மகிழ்ச்சி பொங்கும். போட்டி தேர்வுகளில் முன்னேற்றம் காணப்படும். 

மீனம்:

மே 23ல் சுக்கிரன் மீன ராசியை விட்டு மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த ராசியில் சுக்கிரன் ஏழாம் வீட்டில் பார்வையை வைப்பார். எனவே, இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை கொடுக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் ஏற்படும். பதவி உயர்வு உங்களை தேடி வரும்.  இருப்பினும், சில தடைகள் வரலாம். எதையும் பொறுமையாக கையாள்வது சிறந்தது.


மேலும் படிக்க....Sani Peyarchi: சனி பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு அதிகப்படியான தாக்கம்? யாருக்கு நேரடி அருள்..இன்றைய ராசி பலன்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

கற்றாழை ஜூஸ் குடிங்க.. இந்த 7 நன்மைகள் கிடைக்கும்
கரப்பான் பூச்சியை விரட்டும் எளிய குறிப்புகள்