Shani Gochar 2022: சனியுடன், செவ்வாய் கூட்டு...அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு கடும் சோதனை...

Anija Kannan   | Asianet News
Published : May 03, 2022, 07:30 AM IST
Shani Gochar 2022: சனியுடன், செவ்வாய் கூட்டு...அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு கடும் சோதனை...

சுருக்கம்

Shani Gochar 2022: ஜோதிடத்தில், சனி மற்றும் செவ்வாய் இணைவது அசுபமாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் பிரச்சனை துவங்கும். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, முக்கியமான கிரகங்களாகக் கருதப்படும், சனியும் செவ்வாயும் பகையாளிகள். இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் பிரச்சனை ஆரம்பமாகும். இந்த இரண்டு ராசிகளின் கூட்டு சேர்க்கையால் நிதி, மன, உடல் வலி, திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

இந்த மாதம், அதாவது மே 2022 சனி மற்றும் செவ்வாய் இணையத் தொடங்குகிறது. இந்த இரண்டு கிரகங்களும் கும்ப ராசியில் இணைந்திருப்பதால் 3 ராசிக்காரர்கள் அவதிப்பட நேரிடும். ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணி தான் மிகவும் சிக்கலானது, சவால்கள் நிறைந்தது ஆபத்தானதாகவும் இருக்கும். எனவே அடுத்த 15 நாட்களுக்கு எந்ததெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தேர்ந்து கொள்ளுங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சனி-செவ்வாய் இணைவது அசுப பலன்களை கொடுக்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பணியில் வரும் சிக்கல்களை பொறுமையாக எடுத்துக்கொள்வது நல்லது. இந்த நேரத்தில் எதிரிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடும். எனவே, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி, செவ்வாய் சேர்க்கை ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே உடல் நலத்தில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முதலாளியுடனான உறவுகள் மோசமடையக் கூடும். இந்த நேரத்தில், மகர ராசிக்காரர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வெளியில் உண்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். 

கும்பம்:

கும்பம் ராசியினருக்கு செவ்வாய் - சனி சேர்க்கை மிகுந்த சிரமங்களை தரப்போகிறது.  இந்த கால கட்டத்தில் எந்த விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். இல்லையெனில், நீங்கள் சில பெரிய பிரச்சனைகளில் சிக்கலாம். இந்த ராசிக்காரர்கள் கசப்பாகப் பேசுவதையும், அகங்காரமாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும். வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 


மேலும் படிக்க....மே மாதத்தில் நான்கு கிரகங்களின் ராசி மாற்றம்...யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்