தினமும் செல்ஃபி எடுத்துப் பாருங்கள்..!! அற்புதம் ஏற்படும் நம்புங்கள்..!!

Published : Oct 20, 2022, 11:15 PM IST
தினமும் செல்ஃபி எடுத்துப் பாருங்கள்..!! அற்புதம் ஏற்படும் நம்புங்கள்..!!

சுருக்கம்

யாருக்குத்தான் செல்ஃபி பிடிக்காது? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ஃபி மோகம் யாரையும் விட்டுவைக்கவில்லை

நன்றாக துல்லியமாக செல்ஃபி இருக்க வேண்டும் என்பதற்காகவே பலரும் அதிகவிலை கொண்ட போன் மாடல்களை வாங்குகின்றனர். தனியாக இருக்கையில், பொது இடங்களுக்கு செல்கையில், பொதுநிகழ்ச்சிகளுக்கு  செல்கையில், முக்கியமான நபரை சந்திப்பது என பல்வேறு நிகழ்வுகளை நினைவில்கொள்ள பலரும் செல்ஃபி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த செய்கையை பல தரப்பினர் விரும்பவில்லை என்றாலும், ஆய்வுகள் செல்ஃபி எடுப்பது குறித்து பல்வேறு நல்லெண்ண தகவல்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் செல்ஃபி குறித்து ஆய்வின் மூலம் தெரியவந்துள்ள புதிய தகவலை குறித்து விரிவாக பார்க்கலாம்.

சோகத்திலும் சிரிப்பு

செல்ஃபி எடுக்கும் போது பலரும் பல்வேறு மனநிலையை வெளிப்படுத்துவதுண்டு. ஆனால் பொதுவாக பலரும் செல்ஃபி எடுக்கும் போது சிரிப்பது முதன்மையாக உள்ளது. அப்போது மனநிலை எப்படியிருந்தாலும், திடீரென்று ஏற்படக்கூடிய சிரிப்பு மனதில் இருக்கும் சோகத்தை போக்குகிறது. இந்த மனநிலை மாற்றம் அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போதும் மகிழ்ச்சியை தருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

நம்மை நாமே விரும்புவோம்

செல்ஃபி என்பது தன்னை தானே படம் எடுத்துக் கொள்வது. அப்போது புகைப்படத்தில் நாம் மட்டுமே இருப்போம். உடன் யாரும் இருக்கமாட்டார்கள். இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒருவேளை குறை தெரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம். நமது உணர்வை மடைமாற்றவும் இந்த  தன்னம்பிக்கை நமக்கு தேவைப்படுகிறது.

புறத் தோற்றம் அதிகரிக்கும்

அன்றைய நாளில் நமது தோற்றம் எப்படியுள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்கு பலரும் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். கண்ணாடியில் பார்ப்பது போதாது என்று, செல்ஃபி பிடித்து பார்த்தால் மட்டுமே அவர்களுக்கு தங்களுடைய அழகு பூர்த்தி அடைகிறது. இதனால் புறத் தோற்றம் மேம்படுவதற்கு செல்ஃப் உறுதுணை செய்கிறது. சிறிது சிறுதாக துவங்கும் இந்த வழக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து உங்களுடைய புறத் தோற்றத்தையே மாற்றிவிடுகிறது.

Makhana : பாலுணர்வு முதல் இருதய நலன் வரை- தாமரை விதைகளில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!!

பழக்க வழக்கம் அதிகரிக்கும்

செல்ஃபி எடுப்பது நம்மை நாம் எடைப்போட்டுக்கொள்வதற்கு மட்டுமின்றி, சமூகவலைதளங்களில் போஸ்ட் செய்வதற்கும் தான். தனியாக எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்களுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்காது. ஆனால் இதுவே நண்பர்களுடன் நீங்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் உங்களுடைய நட்பு வட்டத்தை அதிகரிக்கும். இதன்மூலம் புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். இதனால் உங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடித்து இருக்கும்.

நினைவுகள் சேரும்

பழமையில் தான் வாழ்க்கை இருக்கிறது என்கிற ஒரு தத்துவம் உண்டு. முன்னொரு காலத்தில் நம்முடைய நினைவுகளை நினைத்துப் பார்க்க மட்டுமே முடியும். மீறிப் போனால் நமக்கு நடந்த சம்பவங்கள் குறித்தும், நம்முடைய அனுபவத்தை பற்றியும் டைரியில் எழுதி வைக்கலாம் அல்லது மனசுக்குள் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இதனுடைய மேம்பட்ட வடிவமாக செல்ஃபிக்கள் உள்ளன. எதிர்காலத்தில் உங்களுடைய நினைவுகளை அசை போட இந்த செல்ஃபிக்கள் உதவுகின்றன.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!
Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்