திடீரென்று நாய் கடித்தால் என்ன செய்யலாம்..?? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

By Dinesh TGFirst Published Oct 18, 2022, 11:43 PM IST
Highlights

 வளர்ப்பு நாயுடன் மாட்டிக்கொண்டு அது உங்களைத் தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த விபரங்களை பார்க்கலாம்.

இன்றைய நாட்களில் தெரு நாய் மட்டுமில்லாமல், வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் கூட மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திடீரென்று ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களால் கடிபடுவர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகிவிடக்கூடும். வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. அந்த பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருவதும் முக்கியம். அதுதொடர்பான தகவல் உங்களிடம் இருந்தால், நீங்கள் விரைவாக மருத்துவ சிகிச்சை பெற முடியும். இந்நிலையில், வளர்ப்பு நாயுடன் மாட்டிக்கொண்டு அது உங்களைத் தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த விபரங்களை பார்க்கலாம்.

செல்ல நாய் கடிக்க முயன்றால்

ஓடும்போது செல்ல நாய் கடிக்க வந்தால், அந்த நேரத்தில் ஓடக்கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். மாறாக, அங்கேயே நின்று கூச்சலிட்டு, அருகில் நாயை விரட்டுவது போல கத்தவும். இப்படி செய்தால் பெரும்பாலான நாய்கள் பயந்து ஓடிவிடும்.

புதிய அப்பாக்கள் குழந்தையுடன் உறவை வளர்ப்பதற்கான முக்கிய டிப்ஸ்..!

தெரு நாய் துரத்தினால்

நீங்கள் பைக்கில் செல்கையில் தெரு நாய் உங்களைத் துரத்த ஆரம்பித்தால், நீங்கள் பைக்கை வேகமாக ஓட்டிச் செல்வது நல்லது. அதிக பட்சம் தெரு நாய் உங்களை சிறிது தூரம் மட்டுமே துரத்தும், அதன் பிறகு அது துரத்துவதை நிறுத்திவிடும். மீண்டும் தனது இடத்துக்கு திரும்பிவிடும். ஆனால் நீங்கள் அந்த தெருவில் தான் சென்று வரவேண்டும் என்றால், அவ்வப்போது பைக்கில் சென்று வாருங்கள். நாய் துரத்தினால் பிஸ்கட் போடுங்கள். இதன்மூலம் நாயை நட்பாக்கிக் கொள்ள முடியும்.

Dragon Fruit : டிராகன் பழம் குறித்து நீங்கள் அறிந்திராத முக்கியமான 5 விஷயங்கள்..!!

சிறு குழந்தையை நாய் கடித்தால் என்ன செய்வது

குழந்தைகள் நாயிடம் கடி வாங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒருவேளை நாய் குழந்தைகளை கடித்துவிட்டால், கடிபட்ட இடத்தை நன்றாக கழுவ வேண்டும். இதனால் நாயிடம் ஏதேனும் தொற்றுக் கிருமி இருக்கும் பட்சத்தில், அது அகன்றுவிடும். குறைந்தப்பட்சம் கடிப்பட்ட இடத்தில் இருந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ரத்தம் வெளியேறுவது நல்லது. அதை  அடுத்து, அந்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்து எடுங்கள். கடித்த நாய் 10 நாட்களுக்குள் இறந்துவிட்டால், அதற்கு வெறிநாய்க்கடி இருந்தது என்று அர்த்தம். இப்படி நடக்கும் போது, நாய் இறந்துபோனது குறித்து மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது. 

click me!