
மனைவி டார்ச்சர் தாங்கமுடியவில்லை, விவாகரத்து வேண்டும் என கூறி மருத்துவர் ஒருவர் செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் ஜகித்யால் மாவாட்டத்தை சேர்ந்தவர் அஜய்குமார் ராவ். இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் லஷ்யா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
இந்நிலையில், மனைவி லஷ்யாவுக்கும், மருத்துவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்து வந்துள்ளது.
இதனால் கடுப்பான அஜய் குமார் டார்ச்சர் செய்யும் மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என கோரி செல்போன் டவரின் மீது ஏறி கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார்.
இதைதொடர்ந்து அவர் எழுதி வைத்திருந்த கடித்த்ததை கீழே வீசினார். அதில், என் மனைவி என்னை துன்புறுத்துகிறார். இரண்டு நாட்களுக்கு முன் என்னை வீட்டிலிருந்து வெளியில் துரத்தி விட்டார், உடனடியாக எனக்கு விவாகரத்து வேண்டும். இல்லை என்றால் கீழே குதித்து விடுவேன். ஆண்களுக்கு பாதுகாப்பே இல்லையா என குறிப்பிட்டிருந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரிடம் சமாதானம் பேசினர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.