
மனிதனாய்ப் பிறந்த பலர் ஜாதி, மதம் எனப் பிரித்துப் பார்த்து வரும் இந்த உலகத்தில், பாகுபாடு இல்லாமல் வளரும் மிருகங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது ஒரு நாய்.
மதுரை மாவட்டம் கேசம்பட்டி என்னும் கிராமத்தில், தெய்வம் என்பவர் வளர்த்த ஆடு கடந்த சில தினங்களுக்கு முன் குறை மாதத்தில் ஒரு குட்டியை ஈன்று விட்டு இறந்துவிட்டது. இதனால் அந்த ஆட்டுக் குட்டிக்கு புட்டிப் பால் போட்டு வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தெய்வம் வளர்த்து வந்த நாயும் குட்டி போட்டுள்ளது. இந்த நாய் தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுக்கும் போது இந்த ஆட்டுக் குட்டிக்கும் சேர்த்து பால் கொடுத்து வளர்த்து வருகிறது. இந்தக் காட்சியைக் கண்டு, ஆச்சர்யத்தில் இதனை புகைப்படமாக எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.