அடுத்த 2 மாதங்களுக்கு பொதுமக்கள் உஷாரா இருக்க வேண்டும்.. லாவ் அகர்வால் எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Jun 9, 2021, 6:54 PM IST
Highlights

வரும் நாட்களில் கொரோனா 3-வது அலையை தவிர்க்க, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரையில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு லாவ் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

வரும் நாட்களில் கொரோனா 3-வது அலையை தவிர்க்க, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரையில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு லாவ் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இந்தியாவில் கொரோனா 2-வது அலை கடந்த மே மாதம் 7-ம் தேதி உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 79 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. 2-வது அலையில் தற்போதைய நாள்களில் தினசரி பதிவாகும் புதிய பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 

இந்தியாவைப் பொருத்தவரை 10 லட்சம் பேரில் 20,822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. 252  பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர். இது உலகில் மிகவும் குறைந்த அளவாகும். வரும் நாட்களில் கொரோனா 3-வது அலையை தவிர்க்க, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரையில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். 

குறிப்பாக, அடுத்த 2 மாதங்களுக்கு மக்கள் கூட்டாக சேருவதை தவிர்க்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதை கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார். 

click me!