கிரகணத்தின் போது நடந்த அதிர்ச்சி .! பெற்ற குழந்தைகளுக்கு தாய்மார்கள் செய்த ... பகீர் வீடியோ காட்சி..!

By ezhil mozhiFirst Published Dec 26, 2019, 5:01 PM IST
Highlights

நம் முன்னோர்கள் ஏற்கனவே சொன்ன ஒரு விஷயம் என்னவென்றால், சூரிய கிரகணம் ஆகட்டும் சந்திர கிரகணம் ஆகட்டும் எந்த கிரகணமாக இருந்தாலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மட்டும்தான் சொல்லி இருந்தார்கள். 

கிரகணத்தின் போது நடந்த அதிர்ச்சி .! பெற்ற குழந்தைகளுக்கு தாய்மார்கள் செய்த ... பகீர் வீடியோ காட்சி..! 

டிசம்பர் 26 ஆம் நாளான இன்று நாடு முழுக்க சூரிய கிரகணம் மிகத்தெளிவாக சாதாரண கண்களால் பார்க்க முடிந்தது. இன்று காலை சரியாக 8.13 நிமிட அளவில் தொடங்கிய சூரிய கிரகணத்தை மெல்லமெல்ல மக்கள் உற்சாகமாக பார்க்க தொடங்கினர்.

பின்னர் முழு சூரிய கிரகணம் ஏற்படும் போது, நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை அருமையாக பார்த்து ரசித்து, அது குறித்து ஆர்வமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இன்று ஒரு நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கர்நாடகாவில் உள்ள கல்புர்கி என்ற பகுதியில் மண்ணிற்கு அடியில் கழுத்துவரை புதைத்து வைத்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளனர்.

அதாவது அந்த பகுதியில் உள்ள மக்கள் ஒரு சிலர் சூரிய கிரகணத்தின்போது, இவ்வாறு 10 வயதுக்கு உட்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளை மண்ணுக்கு அடியில் கழுத்துவரை புதைத்து வைத்து இருந்தால் அவர்களுக்கு வரும் காலங்களில் எந்த விதமான தோல் நோயும் வராது என்றும் உடல்நல பாதிப்பும் ஏற்படாது, உடல் ஊனம் சரியாகி விடும் என தெரிவிக்கவே பெற்ற தாய்மார்கள் இதனை நம்பி இவ்வாறு செய்து உள்ளனர்.

நம் முன்னோர்கள் ஏற்கனவே சொன்ன ஒரு விஷயம் என்னவென்றால், சூரிய கிரகணம் ஆகட்டும் சந்திர கிரகணம் ஆகட்டும் எந்த கிரகணமாக இருந்தாலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மட்டும்தான் சொல்லி இருந்தார்கள். ஆனால் புதிதாக கிளம்பியுள்ள இந்த ஒரு கூற்று அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


At TajSulthanpur in Kalburgi, kids burried til neck level during solar eclipse. Kids upto 10 yrs are burried , they believe by doing this they can avoid skin diseases & not become physically challenged pic.twitter.com/XFs364U4Jc

— TNIE Karnataka (@XpressBengaluru)

இதுபோன்ற மூட நம்பிக்கையுடன் செய்த இந்த செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர் பொதுமக்கள். ஒருவேளை அவ்வாறு செய்யும் போது குழந்தைகள் மூச்சுத்திணறி ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால், என்ன நடந்திருக்கும் என பெரும்பாலானோர் எதிர்ப்புக் குரலை எழுப்பி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளததில் வைரலாக பரவி வருகிறது.

click me!