செல்லப் பிராணிகளால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன? ஆய்வில் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...

 
Published : Jun 02, 2017, 04:48 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
செல்லப் பிராணிகளால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன? ஆய்வில் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...

சுருக்கம்

The impact of pet animals

1. வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளால்  அலர்ஜி ஏற்படுமா?

. செல்லப்பிராணிகளால் மனிதர்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது. நாய் மற்றும் பூனைதான் அதிகளவில் ஒவ்வாமையை  ஏற்படுத்துகின்றன. கோழி, வாத்து, வான் கோழி, புறா,மீன், முயல், அணில், குதிரை, எலி, லவ் பேட்ஸ் போன்றவைகளும் ஓவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

2. இவை தவிர  வேறு என்னென்ன உயிரினங்களால் அலர்ஜி ஏற்படுகிறது?

வீடுகளில் உலாவும் பல்லி, கரப்பான் பூச்சி, பாச்சை பூச்சி, கழிவுகள் அலர்ஜி ஆகும் பொருட்களில் முக்கியமானவை.

3. செல்லப்பிராணிகளை  வளர்ப்பதால் எப்படி அலர்ஜி ஏற்படும்?

வளர்ப்பு பிராணிகளின் இறந்த செல்கள், உதிர்ந்த ரோமம், உமிழிநீர், சிறுநீர், மலக்கழிவுகள் காற்றில் கலப்பதால் அதை சுவாசிக்கும் நமக்கு உடல் பாதிப்பு ஏற்படுவதோடு, சரும பாதிப்பும் ஏற்படுகிறது.

4. எவ்வகையான பாதிப்புகளை இவை உருவாக்குகின்றன?

இந்த அலர்ஜி பொருட்கள் உடலுக்குள் சென்றதும் ஆன்டிஜென்களாக செயல்படும். அப்போது ரத்தத்தில் இம்ம்யூனோகுளோபுலின் இ எனும் எதிர் புரதம் உருவாகும் இது அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிகளுடன் இணைந்து சில வேதிப்பொருட்களைவெளியேற்றும்  இவை ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்புகளைத் தாக்கும்.

5. இவ்வாறு நரம்புகள் பாதிப்படையும் போது எவ்வகையான உடல் கோளாறுகள் ஏற்படும்?

மூக்கு ஒழுகுவது, தும்மல், சரும அரிப்பு, தடிப்பு, தோல் சிவந்து வீங்குதல் போன்றவை ஏற்படும்.

6. அறிகுறிகள் என்னென்ன?

மூக்கு அரிப்பு, வறட்டு இருமல், ஆஸ்துமா, நெஞ்சு இறுக்கம், கண்ணீல் நீர் வடிதல், எரிச்சல்,கண்கள் சிவப்பது, இமைகள் வீங்குவது, தோல் அழற்சி, கரப்பான் நோய், துாக்கமின்மை,சோர்வு, தொண்டை வலி போன்றவையே அறிகுறிகள்.

7. ஏற்கனவே ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வளர்ப்பு பிராணிகளால் அலர்ஜி ஏற்படுமா?

கட்டாயமாக ஏற்படும். ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்புள்ளவர்களுக்கு வளர்ப்பு பிராணிகளால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு 40 சதவீதம் அதிகம் உள்ளது.

8. என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?

ரத்தப் பரிசோதனை, அலர்ஜியை அறிய உதவும் தோல் பரிசோதனைகள் உள்ளன.

9. சிகிச்சைகள் ?

அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை உள்ளது. இதோடு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படும். இமுனோதெரப்பி சிகிச்சை அளிக்கப்படும்.

10. வளர்ப்பு பிராணியால் ஏற்படும் அலர்ஜியை தடுக்க?

அலர்ஜி உள்ளவர்கள் வீட்டில் எந்தப் பிராணியையும் வளர்க்காமல் இருப்பதே நல்லது. செல்லப்பிராணிகளை தொட்டு துாக்குவது, முத்தம் கொடுப்பது, கொஞ்சுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பூச்சி கொல்லி மருந்துகளைத் தௌித்து வீட்டை சுத்தம் செய்வது அவசியம். வளர்ப்பு பிராணிகளை வளர்க்க ஆசைபடுபவர்கள் அலர்ஜிக்கான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்