மதுரையில் சானிடைஸ்சர் அதிக விலை,தட்டுப்பாடு, பதுக்கல்..கண்டுகொள்ளாத அதிகாரிகள்.. அவதிப்படும் பொது மக்கள்..!!

By Thiraviaraj RMFirst Published Mar 19, 2020, 9:47 AM IST
Highlights

மதுரையில் கிருமிநாசி ஒழிப்பு பொருட்கள்,முக கவசம் போன்ற பொருட்கள் தட்டுப்பாடு ஒரு பக்கம் இருந்தாலும், பல இடங்களில் அந்த பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் இவர்களையெல்லாம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு பொதுமக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.

T,Balamurukan
மதுரையில் கிருமிநாசி ஒழிப்பு பொருட்கள்,முக கவசம் போன்ற பொருட்கள் தட்டுப்பாடு ஒரு பக்கம் இருந்தாலும், பல இடங்களில் அந்த பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் இவர்களையெல்லாம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு பொதுமக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மார்ச் 31ம் தேதி வரைக்கும் விடுமுறை அளித்துள்ளது. சுகாதாரத்துறை,மக்கள் அதிகம் பயன்ப்டுத்தும் செல்போன் காலர்ட்டியூன் போன்றவைகள் மூலம் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும் என விழிப்புணர்வு வழங்கி வருகின்றது.இந்த நிலையில் மருந்து கடைகளில் முககவசம், சானிடைஸ்சர் போன்ற கிருமிநாசினி பொருட்கள் மதுரையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்து கொள்முதல் கடைகள், மருந்து கடைகளில் கிருமிநாசினி பொருள்கள் பதுக்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

நாடும், நாட்டுமக்களும் கொரோனாவில் இருந்து தங்களையும்,தங்களது பிள்ளைகளையும் எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்றும் சித்த மருத்துவ மருந்துப்பொருட்களான சுக்கு, மிளகு. திப்பிலி. சித்தரத்தை,நிலவேம்பு குடிநீர்,மஞ்சள் என இன்னும் பல பொருள்கள் வாங்க தேர்மூட்டி பகுதிக்கு சென்றால் அங்கே மக்கள் கூட்டம் அலைமோதி நிற்கிறது. அங்குள்ள  கடைக்காரர்கள் இதுதான் பொன்னான வாய்ப்பு என்று கருதி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். 
சாதாரண பொதுமக்கள் எப்படியாவது தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் பாதுக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் இதுபோன்ற பொருள்கள் வாங்க அலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேரடியாக அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசாங்கமே இதுபோன்ற கிரிமிநாசி ஒழிப்பு பொருள்களை ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று வழங்க வேண்டும்.கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் வரையிலும் தனியார் கார்ப்ரேட் மருத்துவமனைகள் முழுவதும் அரசுடைமையாக்கப்பட வேண்டும். மருந்துபொருள்கள் சப்ளை செய்யும் ஸ்டாக்கிஸ்ட்கள் அனைவரையும் அரசு கண்காணிக்க வேண்டும். கிருமிநாசினி ஒழிப்பு மருந்துகள் மாநகராட்சி சார்பில் தெருதெருவாக தெளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் முன் வைத்து வருகிறார்கள். 

click me!