கொரோனா தடுப்பூசி! கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட குழப்பம்! அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவு!

By ezhil mozhiFirst Published Apr 14, 2020, 12:25 PM IST
Highlights
ஜனவரி தொடக்கத்திலேயே ,சீனாவின் உயிர் தகவல்தொடர்பு மையம், அண்டார்டிகாவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் இந்த வைரஸ் 3,500 க்கும் மேற்பட்ட மாறுபாடுகளை கொண்டுள்ளது என தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது 
கொரோனா தடுப்பூசி! கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட குழப்பம்! அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவு! 

ஹூகானில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவரின் உடலில் இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டபோது கொரோனா வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்திலும், பரிமாற்றத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு உள்ளதால் நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் பெரும் சவாலாக உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்

அதாவது, இந்த வைரஸ் சில மனித உயிரணுக்களுடன் இணைய அனுமதிக்கும் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஆய்வு கூறுகிறது. இந்த அமைப்பு நுரையீரலில் காணப்படும் ஏசிஇ 2 என்ற நொதியைக் கொண்ட செல்களை குறிவைக்கிறது. இது கடுமையான சுவாச நோய்க்குறி (சார்ஸ்) கொண்டு உள்ளது. எனவே ஆஸ்திரேலியா மற்றும் தைவானின் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா  வைரஸ் மனித உயிரணுக்களுடன்  இணைய முடியாதவாறு அதற்கு எதிரான "ஆன்டிபாடி" உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொடர் மாறுபட்ட வடிவம் மற்றும் பண்புகளானால் நோய் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது என தெரிவித்து உள்ளனர்


ஆராய்ச்சியாளர்கள் - தைவானில் உள்ள தேசிய சாங்குவா கல்வி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெய்-லுங் வாங் மற்றும் ஆஸ்திரேலியாவின் முர்டோக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் இதனை ஏற்கனவே  தெரிவித்து, vaccine கண்டுபிடிக்க பெரும் சவாலை சந்திக்க நேரிடுகிறது என தெரிவித்து இருந்தனர். 

வைராலஜி டெஸ்ட் 

இந்த ஒரு நிலையில், ஜனவரி மாத தொடக்கத்தில் கேரளாவில் உள்ள ஒரு நோயாளியிடமிருந்து தேசிய வைராலஜி நிறுவனம் ஆய்வை மேற்கொண்டது. அதாவது கொரோனாவாலா பாதிக்கப்பட்ட வுஹானில் இருந்து திரும்பிய ஒரு மருத்துவ மாணவர் உடலில் இருந்து மாதிரியை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


ஆய்வு முடிவில், சீன நகரத்தில் அடையாளம் காணப்பட்ட எவருடனும், மருத்துவ மாணவருக்கு உள்ள இந்த மாற்றம் நெருங்கிய தொடர்புடையதாகத் தெரியவில்லை என்று கூறி உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஜனவரி தொடக்கத்திலேயே ,சீனாவின் உயிர் தகவல்தொடர்பு மையம், அண்டார்டிகாவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் இந்த வைரஸ் 3,500 க்கும் மேற்பட்ட மாறுபாடுகளை கொண்டுள்ளது என தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது 

கொரோனா வைரஸின் மாறுபாட்டை கண்காணிக்கும் பெய்ஜிங்கில் உள்ள சீன அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளர், இந்தியாவில் அதிகரித்து வரும் வைரஸ் தாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் தெரிவித்து உள்ளார். காரணம்.... நாளுக்கு நாள் இந்தியாவில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அதன் பாதிப்பு எப்படிபட்ட விளைவை ஏற்படுத்திவிடுமோ என்ற பயமே.

இந்த ஒரு  நிலையில் சில தடுப்பூசிகள் ஏற்கனவே சீனாவிலும் அமெரிக்காவிலும் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளன. ஆனால் RDB மாறுபாடு தான் பெரிய கேள்விக்குறியாக அமைந்து உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அடுத்த கட்ட குழப்பமாக கொரோனா வைரஸில் தான் இப்படி பரிணாம மாற்றம் ஏற்படுகிறதா அல்லது மனித உடலில் உள்ள ஸ்பைக் ப்ரோடீன், இந்த வைரஸால் ஓவ்வொருத்தருக்கும் மாறுபாட்டை ஏற்படுத்துகிறதா என குழம்பி உள்ளனர். 


இதற்கிடையில், சில ஆராய்ச்சியாளர்கள் இது நீண்ட காலமாக மனிதர்களிடையே அமைதியாக பரவி இருக்கலாம் மற்றும் வெவ்வேறு சூழல்களுக்கும் மக்கள் தொகைகளுக்கும் ஏற்ப தேவைப்படாத ஒரு வடிவமாக உருவாகியிருக்கலாம் என்று கருதுகின்றனர். 

தற்போது சீனாவில் ஐந்து வெவ்வேறு தடுப்பூசிகள் வளர்ச்சியில் உள்ளன என்றாலும், "இது வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கணிக்க முடியாது" என்று ஆராய்ச்சியாளர் கூறுவது வருத்தமளிப்பதாகவே உள்ளது.
click me!