நச்சுன்னு 4 பாயிண்ட்..! "எம்மக்கள் ராணுவ வீரர்கள்"..! உற்றுநோக்கப்படும் பிரதமரின் உரை..!

By ezhil mozhiFirst Published Apr 14, 2020, 11:15 AM IST
Highlights

உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது 

நச்சுன்னு  4 பாயிண்ட்..! "எம்மக்கள் ராணுவ வீரர்கள்"..!  உற்றுநோக்கப்படும் பிரதமரின் உரை..! 

இன்றுடன் ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள நிலையில் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது  குறித்து  இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்   

அதன் படி 

கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்.ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது.கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது 

உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.கொரானோ பரவலை கட்டுப்படுத்துவதில் தனிமனித இடைவெளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை விட நாட்டின் நலனே முக்கியம்.


பொருளாதார ரீதியாக நாம் பின்னடைவை சந்தித்தாலும் உயிரிழப்புகளை தடுத்து வருகிறோம். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால்  நிபந்தனை மீறினால் மீண்டும் விலக்கு வாபஸ் பெறப்படும் 

வீட்டில் உள்ள வயதானவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்ட அவர்களை கூடுதல் கவனம் செலுத்தி பார்த்துக் கொள்ளுங்கள். நாட்டில் உணவுப் பொருட்கள் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உரிய மரியாதை கொடுங்கள். 

நல்ல சத்தான உணவு பொருட்களை உண்ண எடுத்துக்கொள்ளுங்கள். நம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க வேண்டும். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் யாரையும் வேலை விட்டு நீக்க வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளார் மோடி. 


மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்படுத்தவேண்டும். இந்த செயலி உங்களுக்கு பேருதவியாக இருக்கும் என பிரதமர் தெரிவித்து உள்ளார்.

கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும், கொரோனா விஷயத்தில் பிரதமர் மோடி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களுக்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது. மக்களும் பிரதமர் என்ன உரை நிகழ்த்துகிறார் என்பதை மிகவும் ஆர்வமாக கவனிக்கின்றனர்.

click me!