இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்!

 
Published : Dec 01, 2017, 05:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்!

சுருக்கம்

The character of women

பிறந்த தேதியின் கூட்டுத் தொகை பிறந்த எண் என்றும், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத் தொகை விதி எண் என்றும் எண்கணித ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட குணாதியசம் கொண்டிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போது எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் போர் ஆர்வம், லட்சியங்கள் நிறைந்தவராய் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் இவர்கள், தங்கள் உணர்வை வெளிப்படையாக கூற மாட்டார்கள். தங்களைப் போன்று இருக்கும் நபர்களுடன் மட்டுமே அதிகம் பழகும் குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

பிப்ரவரி

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள், சற்று ரொமான்டிக்காக இருப்பார்களாம். ஆனால், இவர்களிடம் பொறுமையுடன் பழக வேண்டுமாம். ஏனென்றால் இவர்களின் மனநிலை அடிக்கடி மாறுபடுமாம். இவர்களை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

மார்ச்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள், வலிமையும், கவர்ச்சியும் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுவார்கள். மிக நேர்மையாகவும், ஆளுமை செலுத்தும் நபராகவும் திகழும் இவர்கள், அவ்வளவு எளிதாக காதலில் விழுந்து விட மாட்டார்கள்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள், அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசி விடுவார்கள். ஆனால், சிலர் பொறாமை குணமும் கொண்டிருப்பார்களாம். அதனால், இவர்கள், தங்களை முழுமையாக நம்புபவர்களிடமே மனம் திறந்து பேசுவார்கள்.

மே

மே மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறுதியான, விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். ஆனால், இவர்களுக்கென்று தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட ஈடியாது.

ஜூன்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வத்துடன் அனைவருடனும் பேசுவார்கள். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் மற்றவர் நினைக்கும் முன்பே பேசி முடித்து விடுவார்கள். அதனால இவர்கள் ஒளிவுமறைவு இன்றி நடந்து கொள்வார்கள்.

ஜூலை

ஜூலை மாதம் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவையாக இருப்பார்கள். இவர்கள் மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புபவர்கள். எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ளும் இவர்களை ஏமாற்றி விட்டால், அவர்களுடன் மீண்டும் இணைய மாட்டார்கள்.

செப்டம்பர்

செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள், அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை, யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்து விட மாட்டார்கள். இவர்களுடன் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாட்கள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.

அக்டோபர்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். இவர்கள் தன் மீது பொறாமை கொள்ளும் நபர்களைக் கூட வெறுக்க மாட்டார்கள்.

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களைவிட ஒருபடி முன்னே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உண்மையை விரும்பும் இவர்கள் பொய்களை வேகமாக கண்டுபிடித்து விடுவார்கள்.

டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காதாம். இவர்கள் லக்கியான நபர்கள். இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொண்டு வெற்றி பெறுவார்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்