செவ்வாய் கிழமையில் மறந்து கூட இதை செய்யாதீங்க...! குறிப்பாக இந்த இரண்டையும்....!

First Published Nov 30, 2017, 4:39 PM IST
Highlights
dont do these thing in tuesday


இதை  செய்யாதே என்றால் தான் நாம் அதை கண்டிப்பாக செய்வோம் அல்லவா. அப்படிப்பட்டவர்களுக்கு தான்  இந்த  செய்தி....

நம் முன்னோர்கள் எதை செய்தாலும்  சரி, எதை சொன்னாலும் சரி..அதற்குபின் ஏதாவது ஒரு  காரணம் இருக்கும் ..

அந்த வகையில் இன்று  செவ்வாய் கிழமை பற்றி பார்க்கலாம்...அதாவது  செவ்வாய் கிழைமைகளில் முக்கியமாக  இரண்டு காரியங்களை செய்யவே கூடாது ...

எதை  செய்ய கூடாது ? ஏன்  செய்யகூடாது ?

முடி  வெட்டவோ 

ஷேவிங் செய்யவோ கூடாது 

ஜோதிடத்தின் படி…

செவ்வாய் கிழமைகளில்  முடி வெட்டவோ ஷேவிங்  செய்தலோ, அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது. ஒருசில லாஜிக்குகளைக் கொண்டு ஜோதிடர்கள் இதனை  சொல்வதாக தெரிகிறது

ரத்த சமந்தப்பட்ட நோய்கள் வரும் 

செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறாராம். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும் எனவும்  ஐதீகம்...

செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்

முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்வடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம்.

இவை  அனைத்தும் ஆராய்ச்சி செய்து  நிரூபணம் செய்யாவிட்டாலும், முன்னோர்கள்  பின்பற்றிய  எந்த ஒரு  வழக்கத்திற்கும் ஒரு முக்கிய  காரணங்கள் இருக்க தான்  செய்கிறது 
இதே போன்று, செலவு செய்வதையும்   தவிர்க்க வேண்டுமாம் ....

click me!