விழாவில் கலந்துகொண்ட எல்லா பிரபலங்களும் ஆடம்பரமான தோற்றத்தில் ஆர்ப்பாட்டமாக வந்திருந்தனர். அவர்களுக்கு மத்தியில் சுதா மூர்த்தியின் எளிமை தனித்து நின்றது.
மும்பையில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் ஆடம்பரமான திருமணத்தில் எளிமையாக வந்து கலந்துகொண்ட எழுத்தாளரும் கோடீஸ்வரரின் மனைவியுமான சுதா மூர்த்தி அனைவரையும் கவர்ந்தார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் ஆடம்பரமாக நடைபெற்றது. திருமணத்தில் கலந்துகொண்ட எழுத்தாளர் சுதா மூர்த்தி மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்பட்டார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவரும் கோடீஸ்வரருமான நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி சிம்பிளான புடவையை அணிந்திருந்தார்.
கழுத்தில் நெக்லஸ் போன்ற பளபளக்கும் ஆபரணங்கள் ஏதும் இல்லாமல் இருந்த அவர், கையில் ஸ்மார்ட்வாட்ச் மட்டுமே அணிந்திருந்தார். பிரமாண்டமாக நடந்த திருமண விழாவில் புகழ்பெற்ற தொழிலதிபர் ஒருவரின் மனைவி இவ்வளவு எளிமையாக வந்ததை பலரும் மிகவும் பாராட்டியுள்ளனர்.
கணவரை விட வயதான அம்பானி குடும்ப மருமகள்கள்! பரம்பரையாகத் தொடரும் வயது வித்தியாசம்!
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தைத் தொடர்ந்து ரிசெப்ஷன் 15 வரை தொடர்ந்தது. இந்தக் கொண்டாட்டங்களின் போது மணமகனின் தாய் நீதா அம்பானி 100 காரட் மஞ்சள் வைர ஆபரணத்தை அணிந்திருந்தார் அம்பானி குடும்பத்தின் மூத்த மருமகள் ஷ்லோகா மேத்தாவும் இதய வடிவிலான 450 காரட் வைர நெக்லஸுடன் வலம் வந்தார்.
விழாவில் கலந்துகொண்ட எல்லா பிரபலங்களும் ஆடம்பரமான தோற்றத்தில் ஆர்ப்பாட்டமாக வந்திருந்தனர். அவர்களுக்கு மத்தியில் சுதா மூர்த்தியின் எளிமை தனித்து நின்றது. அவரது எளிமையான தோற்றத்தை புகைப்படங்களில் பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரைப் பாராட்டியுள்ளனர்.
இப்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மூர்த்தி, பல நூல்களையும் எழுதியுள்ளார். அவர் தனது எளிமையால் அடிக்கடி பாராட்டுகளைப் பெறுவது வாடிக்கையாக உள்ளது. ஒரு நேர்காணலில், காசியில் செய்த சபதம் காரணமாக 30 ஆண்டுகளாக புதிய புடவை வாங்கவில்லை என்று கூறியிருந்தார்.
மத்திய பட்ஜெட்டுக்கு முன் நிதியமைச்சர் அல்வா கிண்டுவது ஏன் தெரியுமா?