Exclusive: மதுரையில் கொரோனா பரப்பிய தாய்லாந்து உலமாக்கள்.. இப்ப எங்கே .. அச்சத்தில் மதுரை மக்கள்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 26, 2020, 9:57 AM IST
Highlights

மதுரையில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்து அதனால் இறந்து போன சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திருக்கிறது.இதற்கு காரணமான தாய்லாந்து உலமாக்கள் எப்படியெல்லாம் கொரோனாவை பரப்பினார்கள் .இப்ப அவர்கள் எங்கே இருக்கிறார்கள்.எப்படி மதுரைக்காரருக்கு கொரோனா வைரஸ் பரவியது என்று விசாரணையில் இறங்கினோம். இதோ அந்த தகவல்....,
 

T.Balamurukan

மதுரையில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்து அதனால் இறந்து போன சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திருக்கிறது.இதற்கு காரணமான தாய்லாந்து உலமாக்கள் எப்படியெல்லாம் கொரோனாவை பரப்பினார்கள் .இப்ப அவர்கள் எங்கே இருக்கிறார்கள்.எப்படி மதுரைக்காரருக்கு கொரோனா வைரஸ் பரவியது என்று விசாரணையில் இறங்கினோம். இதோ அந்த தகவல்....,

மார்ச் 12 ஆம் தேதி மதுரைக்கு உலமாக்கள் என்று அழைக்கப்படும் மத போதகர்கள்  தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தனர். அவர்கள் மதுரையில் பல்வெறு பள்ளிவாசல்களுக்கு சென்று இஸ்லாமிய மத போதனைகளை இஸ்லாமியர்களுக்கு போதித்திருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தவர் தான் மதுரையில் கொரானா வைரஸ் தாக்கி இறந்திருக்கிறார். கொரோனா தாக்கி தமிழகத்தில் பலியான முதல் நபர் என்கிற பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். கொரோனா, மதுரையில் இருந்து மையம் கொண்டு தனது கணக்கைத் துவக்கி இருக்கிறது. 

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் நவ்ஷாத் ரஹ்மான்.இவர் மேலமடை பள்ளிவாசல் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இவர்தான் தாய்லாந்தில் இருந்து மதுரை வந்த உலமாக்கள் டீம்க்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.கடந்த பத்து நாட்களாக அந்த உலமாக்கள் குழுவிற்கு மதுரையில் வழிகாட்டியாக இருந்தவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடனே மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். உடனே,அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.நீண்ட நாட்களாக நுரையீரல் நோய், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார்.மேலும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் கொரோனா தாக்குதலில் இருந்து அவர் மீளமுடியாமல் இறந்து போனார்.

மதுரையில் உள்ள 6 முக்கிய பள்ளி வாசல்களில் ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் 2 நாட்கள் தாய்லாந்து உலமாக்கள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.மொத்தம் 12 நாட்கள் அவர்கள் தொடர்ந்து மதுரையில் தங்கியிருக்கிருக்கிறார்கள்.
தாய்லாந்தில் இருந்து மதுரைக்கு வந்த உலமாக்கள்..,12,13 ஆகிய தேதிகளில் அவர்கள் அண்ணா நகர் பள்ளி வாசலிலும், 14, 15  ஆகிய தேதிகளில் அவர்கள் பிர்தோஸ் நகர் பள்ளி வாசலிலும், 16,17 ஆகிய தேதிகளில் அவர்கள் விலாங்குடி பள்ளி வாசலிலும், 
18,19 ஆகிய தேதிகளில் அவர்கள் செல்லூர் பள்ளி வாசலிலும், 20, 21 ஆகிய தேதிகளில் அவர்கள் செல்லூர் புதிய பள்ளி வாசலிலும், 22, 23 ஆகிய தேதிகளில் அவர்கள் மல்லம்பட்டி பள்ளி வாசலிலும் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். 

இந்த 12 நாள் கூட்டங்களில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் 200 பேருக்கும் குறையாமல் இஸ்லாமிய இளைஞர்கள் அந்த கூட்டத்தில் சகோதரர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள்.இதை வைத்து போலீஸ் கணக்கு படி பார்த்தால் உலமாக்கள் மதுரையில் சுமார் 2500 மக்களை சந்தித்து இருக்கிறார்கள். அந்த 2500 பேர் இந்த  நாட்களில் எத்தனை பேரை பார்த்து இருப்பார்கள். ஒருவேளை தொற்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பரவி இருந்தால் அதன் பரவு திறன் மற்றும் பாதிப்பு நினைத்துக் கூட பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்.இறந்து போனவர் திருமண நிகழ்ச்சிகளுக்கும் சென்றிருக்கிறார் என்கிறது போலீஸ் வட்டாரம்.


அண்ணாநகர் முழுவதும் காவல்துறையினரால் சீல் வைத்து,மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அவருடைய வீடு மற்றும் அந்த பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளித்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள். தாய்லாந்து உலமாக்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் மதுரையைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் தாங்களாக முன் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு கலந்து கொண்டவர்கள் இடைப் பட்ட நாட்களில் யாரையெல்லாம் சந்தித்தீர்கள் என்பதை நினைவு கூர்ந்து அவர்களையும் பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்துங்கள். அது போல அவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள் என அறிந்து அவர்களையும் பரிசோதனை செய்யச் சொல்லுங்கள் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. 

தாய்லாந்தில் இருந்து மதுரைக்கு வந்த உலமாக்கள் 4பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்பதற்கான சளி,இருமல்,ரத்தம் மாதிரி எடுத்து மருத்துவ ஆய்வுக்காக அனுப்பியிருக்கிறார்கள்.அந்த ஆய்வு முடிவு வந்த பிறகே அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறியமுடியும்.தமிழகத்தில் இதுவரைக்கும் சமூக பரவலால் கொரோனா பாதிக்கவில்லை என்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.கொரோனா தொற்றால் இறந்து போன நவ்ஷத் உடல் ரசாயன கலவையால் பதப்படுத்தப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மதுரை அண்ணாநகர் பகுதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நபரின் குடும்பத்தில் யாருக்கும் கொரோனா தொற்று வந்துவிடக் கூடாது என்பதற்காக சுகாதாரத்துறையினர் தற்போது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவர் வீட்டில் யாரெல்லாம் எத்தனை நாட்கள் தங்கி இருந்தனர், அவர் சந்தித்த நபர்கள், சென்று வந்த இடங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தி தகவல்களை திரட்டி வருகின்றது போலீஸ். இந்தநிலையில்,
 அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மதுரையில் கொரோனா தனது கணக்கை தொடங்கியிருப்பது மதுரை மக்களுக்கும், தமிழக அரசிற்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கொரோனா தொற்றுடன் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேர் சமூகபரவலில் இருந்ததும் தெரியவந்தது. இவர்கள் மூலமாகத் தான் நவ்ஷத் துக்கு  கொரோனா தொற்று பரவியிருக்கும் என்று மருத்துவர்கள் சந்தேகப்படுகிறார்கள்.இதானல் தான் அவர் உயிர் இழந்ததாகவும் விசாரணையில் தெரியவருகிறது.

இது தவிர அவர் அந்த பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு யார்? யார்? வந்தார்கள் என்பதை கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அந்த பகுதியில் உள்ளவர்கள் யாருக்கேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனே அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.என்ன தான் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போட்டிருந்தாலும்,மதுரை மக்கள் தாய்லாந்து உலமாக்கள் வருகையால் அரண்டு,இருண்டு போய் தான் இருக்கிறார்கள்.

click me!