கொரோனாவுக்கு, நடிகர் கமல் தனது குடும்பத்துடன் தனிமைப்படுத்தி இருக்கிறார்.!!

Published : Mar 25, 2020, 09:06 PM IST
கொரோனாவுக்கு,  நடிகர் கமல் தனது குடும்பத்துடன் தனிமைப்படுத்தி இருக்கிறார்.!!

சுருக்கம்

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தொலைக்காட்சிகளில் வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தன் குடும்பத்துடன் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.இதை சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.

T.Balamurukan

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தொலைக்காட்சிகளில் வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தன் குடும்பத்துடன் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.இதை சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க  மக்களின் நலன் கருதி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாடு பயணத்தில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் வேளையில்,  தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் குடும்பத்தினர் கொரோனா குறித்த எச்சரிக்கையை அறிந்த பின்பு தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 
கடந்த 10 நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்று வந்த நடிகை ஸ்ருதிஹாசன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதேபோல் அவரது தாயார் சரிகா மும்பை வீட்டிலும், தந்தை கமல்ஹாசன், சகோதரி அக்‌ஷராஹாசன் ஆகியோர் சென்னையில் தனித்தனி வீட்டிலும் இருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு பயணம் சென்றுவந்ததால் இந்த முடிவை எடுத்திருக்கிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார் சுருதிஹாசன்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Biogas Plant: சிலிண்டர் கியூவை விடுங்க, வீட்டிலேயே இலவசமா கேஸ் தயாரிக்கலாம்! எப்படின்னு பாருங்க
Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!