பட்டி தொட்டி வரை வைரல்; காருக்கு பதில் உழவு மாடுகள்...வயலில் கிகி நடனமாடிய இளைஞர்கள்!

First Published Aug 4, 2018, 1:13 PM IST
Highlights

தற்போது கிகி நடனம் பட்டி தொட்டி வரை வைரலாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும் கிகி சவாலை தெலுங்கானாவை சேர்ந்த விவசாயிகள் வித்தியாசமான முறையில் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

தற்போது கிகி நடனம் பட்டி தொட்டி வரை வைரலாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும் கிகி சவாலை தெலுங்கானாவை சேர்ந்த விவசாயிகள் வித்தியாசமான முறையில் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும். இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர், நடிகைகள், இளைஞர்கள் பலர் என இந்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆனாலும் இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் எடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கிகி நடனம் உங்களுக்கு நாங்கள் சலித்தவர்கள் இல்லை என்ற நோக்கில் கிராமத்திலும் பிரபலமாகி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2 இளைஞர்கள் ‘கிகி’ நடனம் ஆடுகிறார்கள். ஆனால் அவர்கள் காருக்கு பதில் உழவு மாடுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

விவசாய நிலத்தில் உழவு மாடுகளை வைத்து உழ ஆரம்பிக்கிறார்கள். திடீரென்று இருவரும் மாட்டின் கயிறை விட்டுவிட்டு நடனம் ஆடுகிறார்கள். மாடுகள் தனியாக நடந்து செல்ல இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக வருகிறது. காருக்கு பதில் உழவு மாடுகளை பயன்படுத்தியதால் கிகி நடனத்தை கிண்டல் அடித்திருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

click me!