ஒரு நாளைக்கு இதுக்கு மேல "டீ குடித்தால்".... விளைவு நீங்களே பாருங்கள்..!

First Published Aug 3, 2018, 2:30 PM IST
Highlights
if we have habit of taking tea much leads to big issue


ஒவ்வொரு வரும் ஏதோ ஒரு விஷயத்திற்கு அடிமையாகி இருப்போம் அல்லவா..? ஒரு சிலர் மது அருந்துவதற்கும், ஒரு புகை பிடித்தால், இன்னும் சிலர் பாக்கு போடுதல் இது போன்ற பழக்க வழக்கத்திற்கு  ஆளாகி உடல்  நலத்தை கெடுத்துக் கொள்வார்கள்..

இது ஒருபக்கம் இருக்க, அதிகமாக டீ காபி குடிப்பதும் எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது பார்க்கலாம்.

குறிப்பாக அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்து உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மன நிலைக்கு கூட செல்கின்றனர்

என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..?

அதிக அளவில் டீ எடுத்துக்கொள்வதால், அதில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, உறக்கம் கெடுதல், நிலையில்லாத ஒரு தன்மை உருவாகி மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும்.

மேலும் டீ குடித்தால் அதில் உள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

புற்றுநோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் கீமோ தெரபி நாம் கொடுக்கும் போது, சிகிச்சை பலன் தராது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால், ஹீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாதவாறு தடுத்து நிறுத்தி விடுகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது

click me!